Home
News

பிஎஸ்என்எல் புது ரீசார்ஜ் திட்ட சலுகைகள்: விலை மற்றும் சலுகை விவரங்கள்!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பகிர்ந்து வழங்குதல், ஒழுங்குப்படுத்தல், ப்ரொமோஷன்கள் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை முறைப்படுத்தியிருக்கிறது. அதேபோல் மூன்று விளம்பர சலுகைகளை அறிவித்துள்ளது. ப்ரீபெய்ட் திட்டத்தில் நிறுவனம் மாற்றங்களை செய்திருக்கிறது. இத்தகைய திட்டங்கள் அதிக பயனர்களை ஈர்க்கவும், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையிலும் வருகிறது.

முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள்

முறைப்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பார்க்கையில், நிறுவனம் எஸ்டிவி-298 மற்றும் எஃப்ஆர்சி-249 ஆகியவையாகும். மூன்று புதிய விளம்பர சலுகை திட்டங்கள் குறித்து பார்க்கையில், பிவி-699, முழு டாக்டைம் ரூ.100 மற்றும் பிவி 2399 ஆகியவையாகும். அதேபோல் புதுப்பிக்கப்பட்ட திட்டமாக எஃப்ஆர்சி-108 ஆகும். இந்த திட்டம் அனைத்தும் பயனர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன.

மூன்று புதிய விளம்பர சலுகை

பிஎஸ்என்எல் மூன்று புதிய விளம்பர சலுகைகளை அறிவித்துள்ளது. முதலமாவது பிவி-699 ஆகும் இந்த திட்டம் 90 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த வவுச்சரை இன்றில் தொடங்கி ஜூன் 29 வரை பயன்படுத்தலாம். இந்த திட்டம் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ், 500 எம்பி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. இலவச தனிநபர் ரிங் பேக் டோன் சேவை முதல் 60 நாட்களுக்கு கிடைக்கிறது. இந்த வவுச்சர் 180 நாட்களுக்கு செல்லுபடியாகிறது.

வரம்பற்ற அழைப்பு, தினசரி 3ஜிபி டேட்டா

இரண்டாவது விளம்பர சலுகை பிவி-2399 ஆகும். இது இன்றுமுதல் அடுத்த 60 நாட்களுக்கு கிடைக்கும். இந்த சலுகை மே30 வரை செல்லுபடியாகும். இந்த வவுச்சர் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 3ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச ஈரோஸ் நவ் சந்தா மற்றும் பிஆர்பிடி சேவை ஆகியவை வழங்கும். இந்த சேவை மொத்தம் 437 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த வவுச்சர் வாடிக்கையாளர்கள் வருடாந்திர திட்டத்தில் சாதாரணாக சலுகைகளை விட 72 கூடுதல் செல்லுபடியாகும்.

மூன்றாவது மற்றும் கடைசி விளம்பர திட்டம்

மூன்றாவது மற்றும் கடைசி விளம்பர திட்டம் சலுகையாக, ஏப்ரல் 4 2021 முதல் இது கிடைக்கிறது. இந்த திட்டம் முழு பேச்சு நேரத்தையும் ஜூலை 2 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும். பிஎஸ்என்எல் ஒழுங்குப்படுத்தப்பட்ட திட்டங்களில் இரண்டு திட்டங்கள் இருக்கிறது. விளம்பர அடிப்படையில் வழங்கப்பட்ட திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வழங்குகிறது.

ஒழுங்குப்படுத்தப்பட்ட திட்டம்

ஒழுங்குப்படுத்தப்பட்ட எஸ்டிவி-298 பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்போடு வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலங்கள் 56 நாட்கள் ஆகும். இது செல்லுபடியாகும் காலம் முழுவதும் ஈராஸ் நவ் இலவசமாக அனுபவிக்க முடியும். அதேபோல் புதிய பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் எஃப்ஆர்சி 249 வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1ஜிபி டேட்டா, 60 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வழங்குகிறது. அதேபோல் எஃப்ஆர்சி 108 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரலழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 500 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Announced New Offer For its Prepaid Recharge plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X