BSNL புது ஆபர்.. நவ.18 வரை ரூ.199 க்கு மேல் எந்த திட்டத்தை ரீசார்ஜ் செஞ்சாலும்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை பொறுத்தவரை இன்னும் பண்டிகை காலம் முடியவில்லை போல. நவம்பர் 15 ஆம் தேதி வரை கிடைக்கும் ரூ.1 க்கு 4ஜி பிளான் ஆனது ஏற்கனவே பட்டித்தொட்டி எஙம் ஹிட் அடித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னொரு புதிய ஆபரை (New BSNL Offer) அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனமானது, அதன் பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் வழியாக ரூ.199 அல்லது அதற்கு மேல் உள்ள எந்தவொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும், ஒவ்வொரு ரீசார்ஜிலும் 2.5% உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆபர் வருகிற 2025 நவம்பர் 18 ஆம் தேதி வரை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், "உங்கள் அன்புக்குரியவர்களுக்காக பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் மூலம் ரூ.199 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்து ஒவ்வொரு ரீசார்ஜிலும் 2.5% உடனடி தள்ளுபடியை பெறுங்கள். இது 18 நவம்பர் 2025 வரை செல்லுபடியாகும்" என்று பிஎஸ்என்எல் இந்தியா கூறியுள்ளது.
சுவாரசியமாக பிஎஸ்என்எல்-ன் எக்ஸ் தள பதிவானது இதை ஒரு "பண்டிகை கால" ஆபர் என்று குறிப்பிடுகிறது. ஆக இது பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 4வது பண்டிகை கால ஆபர் ஆகும். முதலாவதாக, 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 க்கு அருமையான புதிய சலுகையை அறிவித்தது.
இந்த சலுகை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு "வெறும் ரூ.1 க்கு" 4ஜி சேவையை வழங்குகிறது. ரூ.1 திட்டம் ஆனது பயனர்கள் பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சேவைகளை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு விரிவான தொகுப்பை வழங்குகிறது.
இதன் கீழ் இந்தியாவிற்குள் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 2ஜிபி அதிவேக டேட்டா, டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 இலவச சிம் கார்டு ஆகியவைகள் கிடைக்கும். இரண்டாவதாக ரூ.499 மீது 3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ரூ.499 என்பது பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் அசல் விலை ரூ.499 ஆகும். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இது ரூ.100 தள்ளுபடியை பெற்று ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் வழியாக அறிவித்து இருந்தது.
ரூ.399 (தள்ளுபடி செய்யப்பட்ட விலை) திட்டத்தின் கீழ் 3.3டிபி அல்லது 3300ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 60 எம்பிபிஎஸ் ஆகும். டேட்டா லிமிட்டை தாண்டிய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீடா ஆனது 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக பிஎஸ்என்எல் நிறுவனமானது 10 கிராம் வெள்ளி நாணயத்தை இலவசமாக வழங்கும் ஒரு ஆபரை அறிவித்து இருந்தது. ஆனால் இந்த ஆபர் அக்.20 உடன் முடிந்து விட்டது. இதற்காக ஒரு பிஎஸ்என்எல் கஸ்டமர் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் பிஎஸ்என்எல் வலைத்தளம் அல்லது பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் மூலம் ரூ.100 அல்லது அதற்கு மேலாக உள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்வது தான். இதை செய்த 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு தினமும் 10 கிராம் வெள்ளி நாணயம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1812 க்கு சம்மன் பிளான் என்கிற புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் டெய்லி 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் - பிஎஸ்என்எல்-க்கு புதிதாக வரும் சீனியர் சிட்டிசன்களுக்கான திட்டமாகும். இது நவம்பர் 18 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








