பிவி 75 திட்டத்துடன் இலவச 4ஜி சிம்கார்ட்: வாடிக்கையாளர்களை கவர பிஎஸ்என்எல் நடவடிக்கை!
பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் பயனர்களுக்கு பிவி75 திட்டத்துடன் இலவச 4ஜி சிம்கார்ட் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 20 முதல் தொடங்கப்பட்ட இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்.

இலவச 4ஜி சிம்கார்ட் சலுகை
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதிய பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளுடன் இலவச 4ஜி சிம்கார்டை வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம்முதல் இலவச 4ஜி சிம்கார்ட் சலுகை தமிழ்நாடு மற்றும் கேரளா தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கிறது.

பிற பகுதிகளில் எப்போது கிடைக்கும்
மார்ச் 31, 2021 வரை இலவச 4ஜி சிம்கார்டு சலுகை தமிழ்நாடு மற்றும் கேரளா தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கும். பிற வட்டங்களில் இந்த சலுகை எப்போது கிடைக்கும் என்ற தகவல் இதுவரை இல்லை. புதிய பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் இணைப்பை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.75 தொகுக்கப்பட்ட பிளான் வவுச்சருடன் இலவச 4ஜி சிம்கார்டை பெறலாம்.

பிஎஸ்என்எல் வழங்கும் பிவி 75 திட்டம் 100 நாட்களுக்கு 100 நிமிட இலவச குரலழைப்புகளையும், 2 ஜிபி தரவை 60 நாட்களுக்கும் வழங்குகிறது. இந்த சலுகையானது சிம்கார்டு விற்பனையை அதிகரிக்க அறிவிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கவர்ச்சிகரமான சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய சலுகையானது தற்போது கேரளா மற்றும் தமிழக வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. வேறுபகுதிகளில் கிடைக்கும் விவரங்கள் இதுவரை இல்லை.


Click it and Unblock the Notifications