3வது தீபாவளி ஆபரை அறிவித்துள்ள BSNL.. ரூ.100 ரீசார்ஜ் செய்தால் 10 கிராம் வெள்ளி இலவசம்.. பெறுவது எப்படி?
2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், ஏற்கனவே 2 தீபாவளி ஆபர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்றாவதாக இன்னொரு புதிய தீபாவளி ஆபரையும் (New Diwali Offer) அறிவித்து உள்ளது.
இந்த சலுகையின் கீழ் - பிஎஸ்என்எல் நிறுவனமானது எக்ஸ்ட்ரா டேட்டாவோ அல்லது ரீசார்ஜ் செய்யும் பொது டிஸ்கவுண்ட்டையோ வழங்கவில்லை. மாறாக 10 கிராம் வெளியி நாணயத்தை இலவசமாக வழங்குகிறது. இது வெறும் ரூ.100 க்கு ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு கூட கிடைக்கும் என்பது கூடுதல் சுவாரசியம்!

பிஎஸ்என்எல் தீபாவளி சலுகையின் கீழ் 10 கிராம் வெள்ளி நாணயத்தை இலவசமாக பெறுவது எப்படி? இதற்காக ஒரு பிஎஸ்என்எல் கஸ்டமர் செய்ய வேண்டியதெல்லாம் பிஎஸ்என்எல் வலைத்தளம் அல்லது பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் மூலம் ரூ.100 அல்லது அதற்கு மேலாக உள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்யும் 10 அதிர்ஷ்டசாலிகள் தினமும் 10 கிராம் வெள்ளி நாணயத்தை வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் எக்ஸ் தள பதிவின் மூலம் அறிவித்துள்ளது, கூடவே இந்த சலுகை 2025 அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளது. ஆக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் விரைவாக செயல்படவும்.
பிஎஸ்என்எல்-ன் முதல் தீபாவளி ஆபர் ஆன ரூ.1 திட்டம் குறித்த விவரங்கள்: 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அருமையான புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு "வெறும் ரூ.1 க்கு" 4ஜி சேவையை வழங்குகிறது.
இந்த ரூ.1 திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டம் பயனர்கள் பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சேவைகளை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு விரிவான தொகுப்பை வழங்குகிறது. இதன் கீழ் இந்தியாவிற்குள் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 2ஜிபி அதிவேக டேட்டா, டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 இலவச சிம் கார்டு ஆகியவைகள் கிடைக்கும்.
பிஎஸ்என்எல்-ன் இரண்டாவது தீபாவளி ஆபர் ஆன ரூ.499 மீதான ரூ.100 தள்ளுபடி குறித்த விவரங்கள்: ரூ.1 ரீசார்ஜை தொடர்ந்து ரூ.499 மீது 3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரூ.499 என்பது பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் அசல் விலை ரூ.499 ஆகும். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இது ரூ.100 தள்ளுபடியை பெற்று ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் வழியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் "ரூ.399 க்கு 3300 ஜிபி டேட்டாவை அனுபவிக்கவும் (3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி) - இந்தியா முழுவதும் அதிவேக 60 எம்பிபிஎஸ் இணையம்! அனைத்து வட்டங்களிலும் இந்த சலுகை செல்லுபடியாகும்" என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.
பிஎஸ்என்எல் குறிப்பிடுவது போலவே ரூ.399 (தள்ளுபடி செய்யப்பட்ட விலை) திட்டத்தின் கீழ் 3.3டிபி அல்லது 3300ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 60 எம்பிபிஎஸ் ஆகும். டேட்டா லிமிட்டை தாண்டிய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீடா ஆனது 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications








