உடனே ரூ.500-க்குள் ரீசார்ஜ் செய்யுங்க.. 30 நாள் இலவச BSNL இன்டர்நெட்.. டிசம்பர் 31 இறுதி நாள்.. எந்த பிளான்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்தியாவில் நம்ப முடியாத ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதுவரை எந்தவொரு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமும் (Indian telecom industries) வழங்காத வகையில், 30 நாட்களுக்கு இலவச இன்டர்நெட் (30 days free internet from BSNL) நன்மையை வழங்கும் இரண்டு புதிய மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் ரூ. 500 விலைக்குள் (BSNL plan under Rs 500) 3300GB டேட்டா நன்மையை வழங்குவதோடு இலவச நன்மையையும் வழங்குகிறது. இது தொடர்பான கூடுதல் விபரம் இதோ.
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது மிக மிக குறைந்த விலையில் மாதம் தோறும் 3.3TB டேட்டா (3.3TB BSNL data plan) நன்மையை வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்களை (BSNL broadband plans) அறிமுகம் செய்து, பல வட்டங்களில் பயன்படுத்த வழங்கி வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் பல நன்மைகளை வாரி வழங்குகிறது.

உடனே ரூ.500-க்குள் ரீசார்ஜ் செய்யுங்க.. 30 நாள் இலவச BSNL இன்டர்நெட்:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு திட்டங்களில் இருந்து எந்தவொரு திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் (recharge) செய்தாலும், உங்களுக்கு ஒரு மாத இன்டர்நெட் சேவை முற்றிலும் இலவசம் (1 month free BSNL internet) என்று BSNL அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்த சலுகை வரும் டிசம்பர் 31, 2024 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்குமென்று BSNL கூறியுள்ளது. இதனால், விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் உடனே இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
1. பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் நியோ பிளான் (BSNL Fiber Basic Neo Plan):
பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் நியோ பிளான் திட்டம் ரூ. 449 விலையில் வருகிறது. இந்த திட்டம் 3.3TB டேட்டா நன்மையை ஒவ்வொரு மாதமும் வழங்குகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 3300GB டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. இது 30Mbps வேகத்தில் ஹை-ஸ்பீட் டேட்டாவாக (high speed data) பயன்படுத்த கிடைக்கிறது. டேட்டா வரம்பை எட்டிய உடன் இன்டர்நெட் வேகம் 4Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (unlimited voice calls) நன்மையும் கிடைக்கிறது. இத்துடன் 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கிறது.
2. பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் பிளான் (BSNL Fiber Basic Plan):
இந்த திட்டம் ரூ. 499 விலையி வருகிறது. இதுவும் 3.3TB டேட்டா நன்மையை 30Mbps வேகத்துடன் வழங்குகிறது. மாதாந்திர டேட்டா வரம்பிற்கு (monthly data limit) பிறகு, இணைய வேகம் 4Mbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (local calls) மற்றும் STD வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.இந்த திட்டத்துடன் ரூ. 100 தள்ளுபடி (discpunt) கிடைக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 500 விலைக்குள் சிறந்த நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த திட்டங்களை மூன்று மாத விருப்பத்துடன் தேர்வு செய்பவர்களுக்கு, 1 மாத இன்டர்நெட் இலவசமாக (1 month internet free from BSNL) கிடைக்கிறது. இந்த சிறப்பு சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே கிடைக்கும். இலவச ஒரு மாத இன்டர்நெட் சேவை மற்றும் தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர்கள் 3 மாத திட்டத்தை முன்கூட்டியே வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








