பிஎஸ்என்எல் பயனர்களே என்ஜாய்- கூடுதல் 90 நாட்கள் வேலிடிட்டி: இந்த திட்டத்தில் உடனே ரீசார்ஜ் செய்யவும்!

|

பிஎஸ்என்எல் நீண்ட கால செல்லுபடியாகும் திட்டங்களை மிகவும் மலிவு விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான சிறந்த திட்டமாக ரூ.1499 பிஎஸ்என்எல் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் 24 ஜிபி மொத்த டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1499 திட்டமானது மொத்தம் 365 நாட்கள் செல்லுபடியாகும் சலுகையை வழங்குகிறது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ப்ரீபெய்ட் திட்டம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ப்ரீபெய்ட் திட்டம்

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ப்ரீபெய்ட் திட்ட பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரையறுக்கப்ட்ட கால ஆஃபர் உடன் வருகிறது. இந்த திட்டம் ஜனவரி 15 2022 வரை செல்லுபடியாகும். இந்த சலுகையான பயனர்களின் ப்ரீபெய்டு திட்டத்துடன் கூடுதலாக 90 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சலுகையான அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் பொருந்தாது, உயர் மதிப்பிலான வவுச்சரை பலர் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி

90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் வருகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது அதன் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை கூடுதல் 90 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. பொதுவாக இந்த திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. தற்போது சலுகையிந் கீழ் பயனர்கள் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டியை பெறுவீர்கள். இந்த புதிய சேவையின் செல்லுபடியாகும் காலம் 455 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. சுமார் 15 மாதங்கள் வரை இந்த திட்டம் செல்லுபடியாகிறது.

ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. எனவே இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் டேட்டா குறித்த கவலைப்பட தேவையில்லை, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் தற்போது நாட்டில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. தொடர்ந்து பிஎஸ்என்எல் திட்டங்கள் தனது பேக்குகளை கவர்ச்சிகரமாக சலுகைகளை மாற்றி வழங்கி வருகிறது.

மிகவும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம்

மிகவும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம்

நீண்ட காலம் செல்லுபடியாகும் மற்றும் மிகவும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் ரூ.1499 திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் பயனர்கள் 24 ஜிபி மொத்த டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1499 திட்டமானது மொத்தம் 365 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அருமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை கொண்டு வந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் நன்மை

100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் நன்மை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 திட்டம் ஆனது 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் ரூ.75 திட்டத்தில் 50 நாட்கள் வேலிடிட்டி உடன் இலவச ரிங்டோன்களும் வழங்கப்படுகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் 60 நாட்களுக்கு இலவச காலர் ட்யூன் சேவையை பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை

மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இது டெய்லி லிமிட் எதுவும் இல்லாமல் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 75 நாட்களில் எப்போது வேண்டுமானதும் இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும். இதுதவிர பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்ஆனது 100 நிமிட வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த 100 நிமிடங்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க் மற்றும் நாட்டில் உள்ள வேறு ஏதேனும் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் ஒருவருடன் பேசும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். பின்பு இது காலாவதியானபிறகு வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 30 பைசா என்கிற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி, 5ஜி சேவைகளை வழங்க முடியும்

4ஜி, 5ஜி சேவைகளை வழங்க முடியும்

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி வசதி இல்லாததால் தொடர்ந்து திணறி வருகிறது, இதையே திமுக எம்பி தயாநிதி மாறனும் மக்களவையில் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆதரவாக செயல்படுவதாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டியதால் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தயாநிதி மாறன் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க முடியும் என முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை 4ஜி சேவை கூட வழங்கப்பட வில்லை. இதனால் பிஎஸ்என்எல் பயன்பாட்டாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகிறார்கள். அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படமே வெளியிடப்பட்டது என்றார். இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இந்த குற்றச்சாட்டு தவறானது என்றனர்.இறுதியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலையிட்டு மத்திய அமைச்சர் தெரிவித்த வார்த்தை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று கூறி கேள்வி நேரம் என்பதால் உறுப்பினர்கள் குற்றம்சுமத்தாமல் தங்களது தொகுதி தொடர்பான விவகாரங்களை எழுப்பவேண்டும் என்றார்.

Best Mobiles in India

English summary
BSNL Announced Extra 90 Days Validity in this Prepaid Plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X