தீபாவளி சூப்பர்.. டூப்பர் ஆஃபர்.. ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டாவை அறிவித்த BSNL.. முந்துங்கள்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்புச் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. அதேபோல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் கூட ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி உட்பட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் தீபாவளி சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது telecomtalk தெரிவித்த தகவலின்படி, பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது. அதாவது ரூ.251, ரூ.299 ரூ.398, ரூ.499, ரூ.599 மற்றும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் செல்ஃப்-கேர் செயலி (BSNL Self-Care App) மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக இந்த கூடுதல் டேட்டாவை பெற பிளே ஸ்டோர் அல்லது ஐஒஎஸ் ஸ்டோரில் உள்ள பிஎஸ்என்எல் செல்ஃப்-கேர் செயலியை பதிவிறக்கம் செய்து மேற்கூறிய திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த 6 திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 70ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது டேட்டா வவுச்சர் ஆகும். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நோக்கங்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த திட்டத்தில் இலவச ஜிங் மியூசிக் பலன்களையும் பெறமுடியும். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பிஎஸ்என்ல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 120ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இதில் 120ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை காலி செய்த பிறகு பயனருக்கான இணைய வேகம் 40 Kbps ஆகக் குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர BSNL ட்யூன்ஸ் மற்றும் மற்றும் சில கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கும் இந்த திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.666 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 105 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர BSNL ட்யூன்ஸ் மற்றும் மற்றும் சில கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications