BSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா? புதிய புரட்சிக்கு சபாஷ்!

|

பி.எஸ்.என்.எல் நிறுவனம், பேட்டியம் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வைஃபை ஆன் போர்டிங் அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது. பேட்டியம் பயனர்களுக்கு பொது வைஃபை சேவையை பி.எஸ்.என்.எல் மூலம் வழங்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஸ்மார்ட் பொது வைஃபை சேவை

ஸ்மார்ட் பொது வைஃபை சேவை

பொது வைஃபை கிடைக்கிறது என்ற அறிவிப்பு மெசேஜ், Paytm பயனர்களுக்கு அனுப்பப்படும். பேட்டியம் பயனர்கள் அந்த மெசேஜ்ஜை கிளிக் செய்து, உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, பொது வைஃபை சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் இந்த சேவையை உருவாக்கியுள்ளது.

தேவையான வைஃபை திட்டம்

தேவையான வைஃபை திட்டம்

முன்பே பிஎஸ்என்எல் நிறுவனம் பொது இடங்களில் வைஃபை சேவை கிடைக்கும் விதத்தில் உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளது. பொது வைஃபை கிடைக்கும் இந்த குறிப்பிட்ட இடங்களில், பயனர்கள் தங்களுக்குத் தேவையான வைஃபை திட்டத்தைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்து இணைய இணைப்பை அணுகிக்கொள்ளலாம்.

மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல்: ஆனால் இதைபின்பற்ற வேண்டும்.!மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல்: ஆனால் இதைபின்பற்ற வேண்டும்.!

பேட்டியம் பயனர்களுக்கு புதிய சேவை

பேட்டியம் பயனர்களுக்கு புதிய சேவை

தற்பொழுது இந்த சேவையை பேட்டியம் பயனர்கள் தங்களின் பேட்டியம் செயலி மூலம் அணுகிக்கொள்ளலாம். பொது வைஃபை கிடைக்கிறது என்கிற பாப்- ஆப் நோட்டிபிகேஷன் மெசேஜ் பேட்டியம் பயனர்களுக்கு அனுப்பப்படும். பயனர்கள் அந்த பாப்- ஆப் நோட்டிபிகேஷனை கிளிக் செய்து, வைஃபை பயன்படுத்துவதற்கான திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

வைஃபை கட்டணம்

வைஃபை கட்டணம்

தேர்வு செய்த பொது வைஃபை சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தி, பயனர்கள் உடனுக்குடன் அந்த பொது வைஃபை சேவையுடன் இணைந்து வைஃபையை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்துடன் பயனர்களின் டேட்டா நுகர்வு மற்றும் செல்லுபடியாகும் விவரங்களையும் பேட்டியும் செயலி மூலம் சரி பார்த்துகொள்ளலாம்.

சத்தமின்றி ட்ரூகாலர் செயலியில் வந்த புத்தம் புதிய வசதி.!சத்தமின்றி ட்ரூகாலர் செயலியில் வந்த புத்தம் புதிய வசதி.!

புதிய புரட்சி

புதிய புரட்சி

இந்த சேவை நிச்சயம் இந்தியாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிஜிட்டல் தடத்தை அதிகரிக்க, ஹாட்ஸ்பாட் இருப்பிடங்களை இயக்க, டிஜிட்டல் மற்றும் இணைக்கப்பட்ட இந்தியாவின் பணிகளுக்கு ஊக்கமளிக்க உதவும் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிஎஃப்ஏ இயக்குநர் விவேக் பன்சால் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
BSNL And PAYTM New Revolution To Offer Smart Wifi Across India Through Public Wifi Zones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X