மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் மூடப்படுமா?

|

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க போராடி வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மூட நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் மூடப்படுமா?

இந்தியாவின் டெலிகாம் துறையைத் தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டப்பின் அரசு நிறுவனங்களான BSNL மற்றும் MTNL போன்ற நிறுவனங்களால் தற்போது தனியார் நிறுவனத்துடன் போட்டி போட முடியவில்லை என்பதே உண்மை. மத்திய நிதி அமைச்சகம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மூடச் சொல்லி பரிந்துரை செய்து இருப்பதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.! ஊரே சோகம்.!புதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.! ஊரே சோகம்.!

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் இரண்டையும் முழுமையாக மூட சுமார் ரூ. 95,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. இந்த பணத்தை வைத்துக் கொண்டு, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களுக்கான செட்டில்மெண்ட் செலவுகள் மற்றும் கடன்களை மட்டும் தான் செட்டில் செய்யமுடியுமாம்.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் மூடப்படுமா?

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள், தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள சுமார் ரூ. 74,000 கோடி முதலீடு செய்யச் சொல்லி, மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் இதை மத்திய அரசு உடனடியாக முடியாதென்று பதில் அளித்து, நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் மூடப்படுமா?

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களில் உள்ள 3 வகையான ஊழியர்கள், முதல் வகை நிறுவனங்களால் நேரடியாக வேலைக்கு எடுக்கப்பட்ட ஊழியர்கள். இரண்டாம் வகை, மற்ற அரசு நிறுவனங்களிலிருந்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டவர்கள். மூன்றாம் வகை, இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை அதிகாரிகளாகப் பதவிக்கு வந்தவர்கள்.

ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் சம்பள விவரங்களை வைத்துத் தான் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் போது கடைசி செட்டில்மெண்ட்களை வழங்கப் போகிறார்களாம். ஆகையால் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு நிறுவனங்களிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!விலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

Best Mobiles in India

English summary
BSNL and MTNL Will Be Closed The Finance Ministry Report : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X