14 ஆயிரம் கோடி ரூபாய் கடன்: நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் .

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. இருந்தபோதிலும் ஜியோ மலிவு விலையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கிறது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள் ஆன பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஒன்று இணையாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு பிஎஸ்என்எல் மற்றும் MTNL (எம்டிஎன்எல்) ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

 மறுமலர்ச்சி திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது

மறுமலர்ச்சி திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது

ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் பிஎஸ்என்எல் மற்றும் MTNL சேவை நிறுவனங்களின் மறுமலர்ச்சி திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களுக்கும் நாடு முழுவதும் 4G சேவைகளை தொடங்க உரிமம் வழங்கப்படும். குறிப்பாக இரு நிறுவனங்களின் மோசமான நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!

ஓய்வூதிய வயது 58

ஓய்வூதிய வயது 58

கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களுக்கும் விஆர்எஸ்-கான திட்டங்களை தயாரித்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58 ஆண்டுகளாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது பின்பு ஒன்றிணைத்தல் கடன்கள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு நோக்கம் கொண்ட வாகனம் அமைக்கும் முடிவை PMO ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!

முதலீட்டு துறை அதிகாரிகள்

முதலீட்டு துறை அதிகாரிகள்

குறிப்பாக இந்த கூட்டத்தில் இரு நிறுவனங்களும் சொத்துக்களை விற்க அல்லது வாடகைக்கு, ஒரு கூட்டுக் குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளன. நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் மற்றும் மற்றும் முதலீட்டு துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது

ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது இதன் மூலம் மத்திய அரசாங்க உதவியுடன் பிஎஸ்என்எல்
ரூ.665 கோடியும் MTNL-க்கு ரூ.2120 கோடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

75 ஆயிரமாக மாற்றும்

75 ஆயிரமாக மாற்றும்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தற்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது, பின்பு 2017-2018 நிதியாண்டில் 31 ஆயிரத்து 287 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தற்சமயம் 1.76 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் விஆர்எஸ் திட்டத்தை தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை 75 ஆயிரமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
BSNL And MTNL Merger Cancelled By Government : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X