ஒரே விலை திட்டங்களை வழங்கி போட்டிப்போடும் பிஎஸ்என்எல், ஜியோ: எது சிறந்தது தெரியுமா?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.798 என்ற விலையிலும் ஜியோ ரூ.799 என்ற விலையிலும் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் எந்த திட்டம் சிறந்தது என இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இடையே போட்டி

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இடையே போட்டி

உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் தொழில்களை பெருக்க பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத் தொடர்பு நிறுவனங்கள். இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக திகழ்வது ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் ஆகும்.

வோடபோன் ஐடியா புதிய பிராண்ட்

வோடபோன் ஐடியா புதிய பிராண்ட்

சமீபத்தில் வோடபோன் ஐடியா., விஐ என்ற புதிய பிராண்டை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜியோ அறிமுகமான குறைந்த காலங்களில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜியோவுடன் போட்டிப்போடும் முயற்சியில் விஐ, ஏர்டெல், பிஎஸ்என்எல் திக்குமுக்காடி வருகின்றன.

ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்கள்

ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்து வருகின்றன. இதில் வரம்பற்ற குரல் அழைப்பு, இணைய சேவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.

அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் Faburaa Grande Hammock Swing: பெறுவது எப்படி?அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் Faburaa Grande Hammock Swing: பெறுவது எப்படி?

ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்தநிலையில் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையிலேயே பிஎஸ்என்எல் நிறுவனமும் ரூ.798 விலையில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோவுக்கு போட்டியாக அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஜியோ வழங்கும் அதே விலையில் பிஎஸ்என்எல் திட்டம்

ஜியோ வழங்கும் அதே விலையில் பிஎஸ்என்எல் திட்டம்

அதன்படி பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.798 திட்டத்தையும் ஜியோ வழங்கும் ரூ.798 திட்டத்தையும் ஒப்பிட்டு எது சிறந்தது என பார்க்கலாம். ஜியோ ரூ.799 விலையில் வழங்கும் திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு வழங்குகிறது. ரூ.798 விலையில் பிஎஸ்என்எல் வழங்கும் திட்டத்திலும் வரம்பற்ற குரலழைப்புகளை வழங்குகிறது.

ஒப்பிட்டு விவரங்கள்

ஒப்பிட்டு விவரங்கள்

அதேபோல் ஜியோ 200 ஜிபி ரோல்ஓவர் வசதியுடன் 150 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பிஎஸ்என்எள் 150 ஜிபி ரோல்ஓவர் வசதியுடன் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இரண்டு நிறுவனங்களும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. டேட்டா ரோல்ஓவர் வசதி என்பது முந்தைய பில்லிங் சுழற்சியில் இருந்து பயன்படுத்தப்படாத டேட்டாவை தற்போது பில்லிங் சுழற்சிக்கு அனுப்ப அனுமதிக்கும்.

பல்வேறு ஓடிடி சலுகைகள்

பல்வேறு ஓடிடி சலுகைகள்

இருப்பினும் ஜியோ பொழுதுபோக்கு வசதிக்கு நெட்பிளிக்ஸ், அமேசான்ப்ரைம் மெம்பர் ஷிப் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா அணுகலை வழங்குகிறது. அதேபோல் ஜியோடிவி, ஜியோ சினிமா போன்ற ஆப் அணுகலையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் எந்த ஒரு ஓடிடி சேவையும் வழங்கவில்லை, குறிப்பாக பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி வேகத்தில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
BSNL and Jio Offers Same Price Postpaid Plans: Here the Comparision Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X