ஜியோ போன்றே டபுள் டமாக்கா ஆபரை அறிவித்த பிஎஸ்என்எல்; இனி கூடுதல் டேட்டா கிடைக்கும்.!

மேலுமொரு எடுத்துக்காட்டாய், பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் வரம்பற்ற காம்போ திட்டங்கள் மற்றும் 3ஜி டேட்டா எஸ்டிவிக்களின் மீது கூடுதலாக 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையை அறிவித்துள்ளது.

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் பாணியில், அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிஜாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் செயல்பட்டு வருகிறது என்பதற்கு மேலுமொரு எடுத்துக்காட்டாய், பிஎஸ்என்எல் தனது ப்ரீபெய்ட் வரம்பற்ற காம்போ திட்டங்கள் மற்றும் 3ஜி டேட்டா எஸ்டிவிக்களின் மீது கூடுதலாக 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையை அறிவித்துள்ளது.

ஜியோ போன்றே டபுள் டமாக்கா ஆபரை அறிவித்த பிஎஸ்என்எல்.!

அதாவது ஒவ்வொரு திட்டமும் தற்போது வழங்கும் இலவச நன்மைகளின் மேல் கூடுதல் 2ஜிபி டேட்டா வழங்கும். பிஎஸ்என்ல்-ன் ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களான ரூ.999, ரூ.666, ரூ.485, ரூ.429 மற்றும் ரூ.186/- மீதும், மறுகையில் உள்ள 3ஜி எஸ்டிவி திட்டங்களான ரூ.448, ரூ.444, ரூ.333, ரூ.349 மற்றும் ரூ.187/- ஆகியவைகளின் மீதும் கூடுதலாக 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இந்த வாய்ப்பானது ஜூன் 18, 2018 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் பிற நன்மைகள் ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.999/- ஆகிய 5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களும்தினசரி அல்லது வாராந்திர வரம்பில்லாத குரல் அழைப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக ரூ.186 மற்றும் ரூ.999 ஆகியவைகள் பிஎஸ்என்எல்-ன் உண்மையான வரம்பற்ற டேட்டாவை வழங்குகின்றன. அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றே தினசரி வரம்பிற்கு பின்னர் 40கேபிபிஎஸ் வேகத்திலான டேட்டாவை வழங்கும்.

ஆக ரூ.186/- ப்ரீபெய்ட் கட்டணத் திட்டமானது இப்போது 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இது ரீசார்ஜ் தேதி முதல் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். பிஎஸ்என்எல்-ன் ரூ.429 திட்டமும் ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இது 81 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ரூ.666/- திட்டமானது 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3.5 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் இறுதியாக, ரூ.999 திட்டமானது 180 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது.

நிறுவனத்தின் டிரிபிள் ஏசஸ் திட்டமான ரூ.333/- ஆனது ஒரு நாளைக்கு 5 ஜிபி அளவிலான டேட்டாவையும், ரூ.444/- ஆனது (நம்பமுடியாத) ஒரு நாளைக்கு 6 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ன் இந்த கூடுதல் டேட்டா வாய்ப்பானது 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் ஒரு விளம்பர திட்டம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதாவது ஜூன் 18, 2018 தொடங்கி அடுத்த 60 நாட்கள் கழித்து, இந்த வாய்ப்பு முடிவுறும் என்று அர்த்தம்.

Best Mobiles in India

English summary
BSNL Also Says Double Dhamaka by Adding 2GB Daily Data to Every Prepaid Combo Plan. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X