Just In
- 9 min ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 15 min ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 1 hr ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- 2 hrs ago
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
Don't Miss
- News
ஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. குறிப்பாக இந்நிறுவனங்கள் 20 சதவிகிதம் வரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை குறைவான விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகின்றன. மேலும் இந்தமூன்று நிறுவனங்களுமே ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல்உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் Amazon Prime வீடியோவின் இலவச சோதனைக்கான அணுகல், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட்திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவசபிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 4ஜி சேவையை முழு வீச்சில் அறிகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்ல4ஜி சேவையை அறிமுகம் செய்தால் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் குறைந்த விலை திட்டங்களை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 திட்டம் ஆனது 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் ரூ.75 திட்டத்தில் 50 நாட்கள் வேலிடிட்டி உடன் இலவச ரிங்டோன்களும் வழங்கப்படுகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் 60 நாட்களுக்கு இலவச காலர் ட்யூன் சேவையை பெறமுடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இது டெய்லி லிமிட் எதுவும் இல்லாமல் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 75 நாட்களில் எப்போது வேண்டுமானதும் இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும். இதுதவிர பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100 நிமிட வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த 100 நிமிடங்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க் மற்றும் நாட்டில் உள்ள வேறு ஏதேனும் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் ஒருவருடன் பேசும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். பின்பு இது காலாவதியானபிறகு வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 30 பைசா என்கிற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மயை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த
திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470