Home
News

மொத்தமாக முடிச்சு விட்ட BSNL.. 84 நாள் வேலிடிட்டி, தினமும் 3ஜிபி டேட்டா, குறைந்த விலை.. ஜியோ, ஏர்டெல் ஓரம்போ..

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியது. இதனால் மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை. இப்போதும் கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் சில இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது.

கூடிய விரைவில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளதாகக் கூறியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது எந்த நிறுவனம் குறைந்த விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மொத்தமாக முடிச்சு விட்ட BSNL.. 84 நாள் வேலிடிட்டி, Jio, ஏர்டெல் ஓரம்போ

ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid recharge plan) தற்போது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் ஜியோவின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் தான் விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.859-க்கு கிடைக்கிறது.

குறிப்பாக ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

மொத்தமாக முடிச்சு விட்ட BSNL.. 84 நாள் வேலிடிட்டி, Jio, ஏர்டெல் ஓரம்போ

ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid recharge plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.719 திட்டம் தான் விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.859-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

வோடபோன் ஐடியா ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Vi Rs 859 prepaid recharge plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்ட நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது.

அதாவது வோடபோன் ஐடியா ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. மேலும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகையை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 prepaid recharge plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக முடிச்சு விட்ட BSNL.. 84 நாள் வேலிடிட்டி, Jio, ஏர்டெல் ஓரம்போ

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். மேலும் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்.

குறிப்பாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையுடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வழங்குகிறது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL, Airtel, Jio, Vi: Who offers 84-day recharge plan at low cost?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X