Home
News

BSNL, Airtel, Jio, Vi மக்களே: இது தெரியலனா நீங்க அதிகமா வீண் செலவு பண்ணுறீங்கனு அர்த்தம்.!

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வாய்ஸ் கால் நன்மை எவ்வளவு முக்கியமோ, அதற்கு நிகராக முக்கியமானது டேட்டா நன்மை. நம் போனில் இன்று டேட்டா பேலன்ஸ் இருப்பது முக்கியமானதாகிவிட்டது. வாட்ஸ்அப் பயன்படுத்தத் துவங்குவதில் இருந்து, கூகிள் பெ, போன்பே, பொழுதுபோக்கிற்கு யூடியூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லாவற்றிற்கும் டேட்டாவின் தேவை, அவசியமாக உள்ளது.

குறைந்த விலையில் தினசரி டேட்டா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டங்கள்.!

குறைந்த விலையில் தினசரி டேட்டா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டங்கள்.!

இப்படி மிக முக்கியமான டேட்டாவை எந்த தடையுமின்றி நீங்கள் தினசரி பெற, சரியான ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தியாவில் இப்போது ரீசார்ஜ் திட்டங்களில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியாக நன்மையுடன் கிடைக்கும் குறைந்த விலை திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சிக்கலாகிறது.

நீங்கள் BSNL, Airtel, Jio, Vi பயனரா? அப்போ இந்த ரீசார்ஜ் பிளான்களை மிஸ் பண்ணாதீங்க.!

நீங்கள் BSNL, Airtel, Jio, Vi பயனரா? அப்போ இந்த ரீசார்ஜ் பிளான்களை மிஸ் பண்ணாதீங்க.!

உங்கள் பாரத்தைக் குறைப்பதற்காக, இப்போது இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த டெலிகாம் ஆப்ரேட்டர்களிடம் இருந்து கிடைக்கும் மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் BSNL, Airtel, Jio, Vi என்று எந்த பயனராக இருந்தாலும் சரி, இந்த பதிவு உங்களுக்கானது.

சில நூறு செலவில் தினசரி 1ஜிபி டேட்டா.!

சில நூறு செலவில் தினசரி 1ஜிபி டேட்டா.!

BSNL, Airtel, Jio, Vi போன்ற ஆப்ரேட்டர்களிடம் இருந்து கம்மி காசில் தினசரி டேட்டா கிடைக்கும் டீசெண்டான ரீசார்ஜ் திட்டங்களை இங்குத் தொகுத்துள்ளோம். சில நூறு ரூபாய் செலவில், தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் பெஸ்டான ரீசார்ஜ் திட்டங்களை என்ன விலையில் வாங்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ. 184 ரீசார்ஜ் திட்டம்

BSNL ரூ. 184 ரீசார்ஜ் திட்டம்

அரசு நடத்தும் BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் கம்மி விலை ரீசார்ஜ் திட்டமாக இந்த ரூ. 184 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டம் இடம்பெறுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு ரூ.184 விலையில் தினசரி 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைக்கிறது.

BSNL வழங்கும் எக்ஸ்ட்ரா நன்மை

BSNL வழங்கும் எக்ஸ்ட்ரா நன்மை

இத்துடன் உங்களுக்குத் தினசரி 100 SMS நன்மையையும் BSNL நிறுவனம் வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் உங்களுக்கு எக்ஸ்ட்ரா நன்மையாக BSNL இலவச காலர் டியூன்ஸ், பாட்கேஸ்ட் நன்மை போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

Airtel ரூ. 265 ரீசார்ஜ் திட்டம்

Airtel ரூ. 265 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ. 265 விலையில் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 100 SMS நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

ஏர்டெல் வழங்கும் எக்ஸ்ட்ரா நன்மைகள்

ஏர்டெல் வழங்கும் எக்ஸ்ட்ரா நன்மைகள்

இத்துடன் எக்ஸ்ட்ரா நன்மையாக, உங்களுக்கு Wynk மியூசிக் நன்மை, இலவச ஹலோ டியூன்ஸ் நன்மை போன்ற கூடுதல் நன்மைகளும் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த திட்டம் FUP வரம்பிற்கு பின் உங்களுக்கு 64 Kbps வேகத்தில் டேட்டாவை வழங்குகிறது. இதற்கு முன்னர் பார்த்த BSNL திட்டம் 40 Kbps வேகத்தில் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vi ரூ. 269 ரீசார்ஜ் திட்டம்

Vi ரூ. 269 ரீசார்ஜ் திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்குத் தினசரி 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இது உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 SMS நன்மைகளை தடையின்றி வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியைப் பொறுத்த வரை, இதுவும் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது எக்ஸ்ட்ரா நன்மையாக Vi Movies & Tv நன்மையை வழங்குகிறது.

Jio ரூ. 209 ரீசார்ஜ் திட்டம்

Jio ரூ. 209 ரீசார்ஜ் திட்டம்

குறைந்த விலையில் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை 4ஜி வேகத்தில் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த Jio ரூ. 209 திட்டம் நல்ல தேர்வு. இந்த திட்டம் தினசரி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் உங்களுக்குத் தினமும் 100 SMS நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது.

ஜியோ வழங்கும் கூடுதல் இலவசங்கள் என்ன தெரியுமா?

ஜியோ வழங்கும் கூடுதல் இலவசங்கள் என்ன தெரியுமா?

கூடுதல் இலவசங்கள் பற்றிப் பார்க்கையில், இந்த ரீசார்ஜ் திட்டம் Jio Tv, JioCinema, Jio Security, Jio Clouds போன்ற சேவைகளை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்தவுடன், FUP விதிப்படி, உங்களுடைய இணைய வேகம் 64Kbps ஆக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

28 நாள் வேலிடிட்டியுடன் கம்மி காசில் டெய்லி டேட்டா பெஸ்ட் சாய்ஸ்!

28 நாள் வேலிடிட்டியுடன் கம்மி காசில் டெய்லி டேட்டா பெஸ்ட் சாய்ஸ்!

குறைந்த விலையில் தினமும் டேட்டா பற்றாக்குறை இல்லாமல் உங்கள் வாழ்க்கையை நகர்ந்த விரும்பினால், நீங்கள் இந்த ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். உண்மையில், இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வழங்கும் 1ஜிபி டேட்டா சிலருக்குப் பற்றாது என்றாலும் கூட, நிறுவனம் கம்மி காசில் வழங்கக்கூடிய டீசெண்டான தினசரி டேட்டா கிடைக்கும் 28 நாள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL, Airtel, Jio, Vi users should know this low price 1gb daily data recharge plans immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X