Home
News

BSNL, Airtel, Jio: பட்ஜெட் கிங் ரீசார்ஜ்.. ரூ.92 விலையில் தினசரி டேட்டா.. எத்தனை GB டேட்டா? எவ்வளவு வேலிடிட்டி

யாரும் எதிர்பார்க்காத விலையில் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்கபோகும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை இந்திய டெலிகாம் (Telecom)நிறுவனங்களான பிஎஸ்என்எல் (BSNL), ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) ஆகிய நிறுவனங்கள் ஒரே விலையில் அறிமுகம் செய்யவுள்ளன.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஜியோ (Jio) ஆகிய நிறுவனங்கள் ஒரே நேரத்தில் ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (New prepaid recharge plan) அறிமுகப்படுத்த திட்டமுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் குறைந்த விலையில் தினசரி டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் நபர்களுக்காக இந்த திட்டத்தை டெலிகாம் நிறுவனம் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ள்ளது.

BSNL, Airtel, Jio: பட்ஜெட் கிங் ரீசார்ஜ்.. ரூ.92 விலை தினசரி டேட்டா..

பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டம் (BSNL, Airtel, Jio New Prepaid Plan):

ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் ரூ. 100-க்கும் குறைந்த விலையியல் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளன. இந்தத் திட்டம் இன்றுவரை கிடைக்காத மிகவும் மலிவான விலையில் நீண்ட காலம் நீடிக்கும் செல்லுபடியுடன் தினசரி டேட்டா நன்மையை வழங்கும் திட்டமாக வெளிவரும். இந்த கூட்டு முயற்சியானது இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அனைத்து பயனர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் BSNL, Airtel மற்றும் Jio வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ. 92 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி இணைய டேட்டாவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் 20 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மூன்று தொலைத்தொடர்பு சேவைகளின் பயனர்களும் இந்த திட்டத்தை செயல்படுத்தி பயன்படுத்த முடியும்.

இந்த புதிய ரூ. 92 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (New Rs 92 Prepaid Recharge Plan) விரைவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். பிஎஸ்என்எல் ரூ. 93 திட்டம் (BSNL Rs 92 Plan), ஏர்டெல் ரூ. 92 திட்டம் (Airtel Rs 92 Plan) மற்றும் ஜியோ ரூ. 92 திட்டம் (Jio Rs 92 Plan) அந்தந்த நிறுவனங்களின் சிம் கார்டு பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

BSNL, Airtel, Jio: பட்ஜெட் கிங் ரீசார்ஜ்.. ரூ.92 விலை தினசரி டேட்டா..

புதிய ரூ. 92 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (New Rs 92 Prepaid Recharge Plan):

இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களை அனைவருக்கும் அணுகக்கூடிய வகையில் டெலிகாம் நிறுவனங்கள் அதன் அதிகப்பூர்வ தளம் மற்றும் மொபைல் ஆப்ஸ் வழியாக வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வப்போது, ​​ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் மற்றும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்த புதிய திட்டம் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாகும். இது குறைந்த விலையில் கணிசமான இணைய நன்மைகளை வழங்குகிறது.

குறைந்த செலவில், சிறந்த ரீசார்ஜ் விருப்பங்களைத் தேடும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம் 2 ஜிபி தினசரி இணையம் மற்றும் 20 நாட்கள் செல்லுபடியாகும் மலிவு விருப்பத்தை வழங்குகிறது. இந்தத் தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டத்தை விரைவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Airtel Jio Might Launch Rs 92 Prepaid Recharge Plan In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X