Home
News

BSNL ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் இரண்டு திட்டங்கள்..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்திருந்தது. ஆனால் சமீபத்தில் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் நீக்கப்பட்டது. குறிப்பாக ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கி வந்தது. எனவே இந்த திட்டம் நீக்கப்பட்டதால் தற்போது இரண்டு பிஎஸ்என்எல் திட்டங்கள் மட்டுமே தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இங்கே அந்த திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

BSNL ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி தரும் இரண்டு திட்டங்கள்..

மேலும் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி இந்த திட்டம் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் 4ஜி குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியானது. அதன்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. அதாவது மார்ச் 5, 2025 நிலவரப்படி 83,629 4ஜி டவர்களை பிஎஸ்என்எல் நிறுவியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Take a Poll

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை விரைவில் அனைத்து பகுதிகளிலும் வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்நிறுவனம் 1 லட்சம் 4G தளங்களை நிறுவிய பிறகு, 5G ஐ அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கிவிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக பிஎஸ்என்எல் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும் அதிக பயனர்கள் இந்நிறுவனத்தில் இணைவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL affordable prepaid plans that offer 3GB data per day: Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X