BSNL ஜோரு.. 5 மாதத்திற்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. தினசரி ரூ. 6 மட்டும் போதும்.. எந்த திட்டம்? என்ன விலை?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) அதன் வாடிக்கையாளர்களுக்கு 160 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (160 days validity) திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் (BSNL) டெலிகாம் நிறுவனம் இந்தியாவின் நம்பகமான திட்டமாக பார்க்கப்படுகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel),வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் திடீரெனெ அமல் படுத்திய விலை ஏற்றம் காரணத்தினால் மக்கள் தனியார் டெலிகாம் நிறுவனங்களை புறக்கணித்து வருகின்றனர். இதன் விளைவாக மக்கள் இப்போது குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் பக்கம் மாற துவங்கியுள்ளனர்.

BSNL ஜோரு.. 5 மாதத்திற்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. தினசரி ரூ. 6 மட்டும் போதும்:
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இப்போது குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 160 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 5 மாதம் + 10 நாள் வேலிடிட்டியை இந்த திட்டம் வழங்குகிறது. 5 மாத்திற்கு ஒரு மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற நன்மையை இந்த பிளான் வழங்குகிறது.
நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan) ஆகும். இந்த திட்டம் தான் 160 நாட்கள் வேலிடிட்டி (160 days validity plan) உடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. எனவே மொத்தமாக 160 நாட்களுக்கு இந்த திட்டம் 320GB டேட்டா நன்மை இதில் உள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மையை வழங்குகிறது. பிறகு இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மைகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 997 திட்டம் (BSNL Rs 997 Plan):
இந்த பிஎஸ்என்எல் 997 பிளான் (BSNL 997 Plan) திட்டம் பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. அதேபோல் ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.
இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் பொதுவாக பார்க்கையில் ஒரு பெரும் தொகையாக சிலருக்கு கருதலாம், ஆனால், உண்மையில், நீங்கள் மாதம் தோறும் தவறாமல் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை காட்டிலும் இதன் விலை மலிவானதாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டம் தினசரி வெறும் ரூ. 6 ரூபாய் மதிப்பில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 5 மாதங்களுக்கு இடையில் ரீச்சார்ஜ்ஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.


Click it and Unblock the Notifications