ரூ.98 ஆப்பரில் பிஎஸ்என்எல்- ஜியோ-ஏர்டெல் எது சிறந்தது.!
இந்திய தொலைபேசி சந்தையில் ஜியோ நுழைந்தது. பல்வேறு சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கியது. இதனால் தற்போது ஜியோ முன்னணி நெட்வொர்க்காக இருக்கின்றது.
இந்திய தொலைபேசி சந்தையில், ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன், ஐடியா, டாடா டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் பொது மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றன.

மேலும் வர்த்தக நோக்கத்துடன் இருப்பதாலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், வாடிக்கையாளர்களை தங்க வைத்து கொள்ளவும் பல்வேறு சிறப்பு சலுகைகளை பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு செல்போன் நிறுவனங்கள் தங்களுக்கு தகுந்தார் போல் வழங்கி வருகின்றனர்.

ஜியோ வருகை:
இந்திய தொலைபேசி சந்தையில் ஜியோ நுழைந்தது. பல்வேறு சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கியது. இதனால் தற்போது ஜியோ முன்னணி நெட்வொர்க்காக இருக்கின்றது. மேலும் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியும் வருகின்றது. இதனால் இந்திய தொலைபேசி சந்தையில் மற்ற நிறுவனங்களும் ஜியோவுடன் போட்டி போடும் நிலைக்கு தள்ளப்பட்டன.

கடும் போட்டி:
ஜியோ பல்வேறு சலுகைகளை வழங்கியதை போல, மற்ற நிறுவனங்களான பிஎஸ்என்எல், ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகையை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் ஜியோவுக்கு போட்டியாவும் அதே சலுகை விலையில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளன.

ரூ.98க்கான சலுகை வழங்கும் நிறுவனங்கள்:
இதில் ரூ.98க்கு சலுகை வழங்கும் நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் மட்டும் உள்ளன. இதில் எவ்வாறு சலுகைகைள் இருக்கின்றது என்று பார்க்கலாம்.

ஜியோ:
ஜியோ நிறுவனம் ரூ.98க்கு தினமும் 4ஜியில் 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. மேலும் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால்ஸ், 300 எஸ்எம்எஸ் ரோமிங் ப்ரீ 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.98க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 4 ஜியில் 1.5 ஜிபியை 26 நாட்களுக்கு வழங்குகின்றது. மேலும் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ்களும் வழங்கின்றது.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.99க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 4 ஜியில் 3 ஜிபியை 28 நாட்களுக்கு வழங்குகின்றது. மேலும் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால்களையும், 300 எஸ்எம்எஸ்களையும் வழங்கின்கிறது. இந்த மூன்று நிறுவனத்தின் ஆப்பரில் எது சிறந்தது என்று நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications