சாட்டிலைட் வழியாக SMS, ஸ்பேம் பிளாக்கிங், Any Time SIM.. 7 புதிய சேவைகள் அறிமுகம்.. BSNL-ன் மாஸ்டர் ஸ்டோர்க்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்த கையோடு, பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கான 7 புதிய சேவைகளையும் (7 New Services) அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி, நிறுவனத்தின் புதிய லோகோவானது - நம்பிக்கை, வலிமை மற்றும் நாடு தழுவிய அணுகலை குறிக்கிறது. அதற்கு ஏற்றபடியே - நாடு முழுவதுமான 4ஜி நெட்வொர்க் அறிமுகத்திற்கு முன்னதாக - தனது வடிக்கையாளர்களுக்கான பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) அறிமுகம் செய்துள்ள 7 புதிய சேவைகள் என்னென்ன?
1. ஸ்பேம் பிளாக்கிங் சொல்யூஷன் (Spam-blocking solution): பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னை ஸ்பேம் இல்லாத நெட்வொர்க் என்று கூறுகிறது; இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் நிகழ்நேரத்தில் மோசடிகள் மற்றும் ஸ்பேம் காண்டாக்ட்களை அகற்ற கஸ்டம் சொல்யூஷனை (Custom Solution) பயன்படுத்துகிறது.

2. வைஃபை ரோமிங் (WiFi Roaming): பிஎஸ்என்எல் நிறுவனம் வைஃபை ரோமிங் சேவையையும் அறிவித்துள்ளது. இது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் பயனர்கள் பயணம் செய்யும் போது, எந்தவொரு பிஎஸ்என்எல் எப்டிடிஎச் வைஃபை நெட்வொர்க்குடனும் (BSNL FTTH Wi-Fi network) கனெக்ட் ஆக முடியும்.
3. இன்ட்ராநெட் லைவ் டிவி (Intranet live TV): இதன்கீழ் எப்டிடிஎச் பயனர்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் அடிப்படையிலான (fibre-based) இன்ட்ராநெட் லைவ் டிவி சேவையின் மூலம் 500 க்கும் மேற்பட்ட பிரீமியம் டிவி சேனல்களை (500+ Premium TV Channels) அணுகலாம்.
4. எனி டைம் சிம் (Any Time SIM): இந்த சேவையின் கீழ், ஏடிஸ் (ATS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தானியங்கி எனி டைம் சிம் கியோஸ்க்குகள் (Kiosks) வழியாக 24/7 அடிப்படையில், வாடிக்கையாளர்களால் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை வாங்க முடியும். இதன் கீழ் டிஸ்பென்ஸ (Dispense), கேஒய்சி செயல்முறை (KYC Process) மற்றும் சிம் கார்டு ஆக்டிவேஷன் (SIM card activation) ஆகியவைகள் தானாகவே நடக்கும்.
5. எஸ்எம்எஸ்-களுக்கான சாட்டிலைட்-டூ-டிவைஸ் கனெக்டிவிட்டி (satellite-to-device connectivity for SMS): நிலம், வான் மற்றும் கடலில் வேலை செய்யும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கான இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்-சாதன இணைப்பு சேவைகளையும் (India's first satellite-to-device connectivity for SMS services) பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
6. டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்டிற்கான (Disaster management) ஒன்-டைம் சொல்யூஷன் நெட்வொர்க்: பிஎஸ்என்எல் நிறுவனமானது பேரிடர் மேலாண்மைக்காக ஒன்-டைம் சொல்யூஷன் நெட்வொர்க் சேவையையும் அறிவித்துள்ளது.
7. சுரங்கத் துறைக்கான பாதுகாப்பான 5ஜி நெட்வொர்க் (Secure 5G network for Mining sector): கடைசியாக பிஎஸ்என்எல் நிறுவனமானது சுரங்கத் துறைக்கான பாதுகாப்பான 5ஜி நெட்வொர்க்கை அறிவித்துள்ளது. இது பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகத்தின் போது ஒரு முக்கியமான சேவையாக பார்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க் (4G Network) நாடு முழுவதும் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் விஐ (Vi - Vodafone Idea) ஆகியவற்றின் கட்டண உயர்வுக்குப் பிறகு, பிஎஸ்என்எல் அதன் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களின் வழியாக சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நல்ல அதிகரிப்பை கண்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 4ஜி வெளியீட்டை (4G Rollout) நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறது. கூடவே 5ஜி நெட்வொர்க்கில் (5G Network) பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 5ஜி எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
புதிய லோகோஅறிமுகம் குறித்து பேசுகையில், இது இந்நிறுவனத்தின் மாற்றத்திற்கான விடியலை குறிக்கிறது. தடையற்ற, உலகளாவிய, மலிவான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய இணைப்பை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று வடகிழக்கு பிராந்தியத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஆன ஜோதிராதித்யா எம் சிந்தியா கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications








