BSNL கெத்தா செஞ்சுவிட்டாப்ல.. 6500GB டேட்டா.. 500+ TV சேனல்.. 8 இலவச OTT சந்தா.. மாத செலவு இவ்வளவு கம்மியா?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது 6500GB டேட்டா நன்மையை வழங்கும் திட்டத்தை இந்தியாவில் வழங்க துவங்கியுள்ளது. அதிக டேட்டா நன்மையை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிஎஸ்என்எல் (BSNL) திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த 6500GB டேட்டா நன்மையை உங்கள் மொத்த குடும்பமும் பயன்படுத்த முடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பாக இருக்கிறது. இது எந்த திட்டம்? இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்திய தொலைத்தொடர்பு வட்டத்தில் இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கிடாத நன்மையை இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தை பார்த்து, தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்றவை அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

BSNL கெத்தா செஞ்சுவிட்டாப்ல.. 6500GB டேட்டா.. 500+ TV சேனல்.. 8 இலவச OTT சந்தா:
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் அல்ட்ரா (BSNL Ultra) என்று குறிப்பிடுகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இதில் அல்ட்ரா டேட்டா நன்மை கிடைக்கிறது. மலிவு விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பைட் ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் மக்களை கவர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம், இப்போது வைஃபை பயனர்களை கவர துவங்கியுள்ளது.
மலிவு விலையில் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டங்களை வழங்க துவங்கியுள்ளது. BSNL-ன் புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் 25 Mbps டேட்டா ஸ்பீட் முதல் துவங்கி 300 Mbps டேட்டா வேகம் வரையிலான ஹை-ஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது. இந்த பிராட்பேண்ட் திட்டங்களில் சிறந்த பிரீமியம் திட்டமாக வெளிவந்துள்ள திட்டம் தான் பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி திட்டம் (BSNL Fibre Ultra OTT Plan).
பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ஓடிடி திட்டம் (BSNL Fibre Ultra OTT Plan):
இந்த திட்டம் ரூ. 1799 என்ற மாத கட்டணத்துடன், ஒவ்வொரு மாதமும் 6.5TB டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது, இந்தத் திட்டம், 6500GB டேட்டா நன்மையை அதன் பயனருக்கு வழங்குகிறது. இத்துடன் கூடுதல் இலவச நன்மையாக பல OTT நன்மைகளையும் வழங்குகிறது. இந்த BSNL ஃபைபர் அல்ட்ரா OTT திட்டம் 300 Mbps வேகத்துடன் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, 6500 GB டேட்டாவையும் ஒரு பயனர் 30 நாட்களுக்கும் பயன்படுத்தி தீர்த்துவிட்டால், நியாயமான பயன்பாட்டு கொள்கை (FUP) வரம்பை எட்டிய பிறகு, வேகம் 20 Mbps ஆக குறைக்கப்பட்டு அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்கப்படும். இந்த திட்டத்துடன் 500+ லைவ் டிவி சேனல்களை அனுபவிக்கும் நன்மையையும் கிடைக்கிறது. இத்துடன் கூடுதலாக இலவசமாக ஏராளமான OTT நன்மைகளும் கிடைக்கிறது.
இலவச OTT நன்மைகள்:
இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), யூப் டிவி பேக் (YuppTV pack), சோனி லிவ் (SonyLIV), ஜீ 5 (ZEE5), லயன்ஸ் கேட் பிளே (Lionsgate Play), பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சேவை வாங்கினால் கிடைக்கும் இலவசங்கள்: ஷேமாரு மீ (ShemarooMe) மற்றும் எபிக்கான் (EpicON) உள்ளிட்ட பல்வேறு ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளை இந்த திட்டம் உங்களுக்கு வழங்குகிறது.
மார்ச் 31, 2025 வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் BSNL பிராட்பேண்ட் இணைப்புகளை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் உடனே இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்வது பணத்தை மிச்சம் பிடிக்க வழிவகுக்கும். கூடுதல் விபரங்களுலு BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் BSNL மொபைல் ஆப்ஸை பார்வையிடலாம்.


Click it and Unblock the Notifications