Home
News

சுடசுட BSNL 65 பிளான்.. ரூ. 300 ரேஞ்சில் ஒரு சூப்பர் பிளான் ரெடி.. 2 மாதம் + 5 நாள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி..

அடேங்கப்பா, இது நம்ம லிஸ்டலையே இல்லையே என்று வியக்கும் அளவில், பிஎஸ்என்எல் (BSNL) என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனம், ரூ. 300 விலை ரேஞ்சில் 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ (Jio). ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற எந்தவொரு தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனமும் கூட இத்தகைய திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது என்ன திட்டம்? இந்த திட்டத்தின் விலை என்ன? என்ற விபரம் இங்கே.

மலிவு விலையில் சிறந்த நன்மைகளை தேடும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (new BSNL prepaid recharge plan) அறிமுகம் செய்துள்ளது. 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை வெறும் 300 ரூபாய் விலை ரேஞ்சில் அறிமுகம் செய்து, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுடசுட BSNL 65 பிளான்.. ரூ. 300 ரேஞ்சில் ஒரு சூப்பர் பிளான் ரெடி..

சுடசுட BSNL 65 பிளான்.. ரூ. 300 ரேஞ்சில் ஒரு சூப்பர் பிளான் ரெடி:

குறைந்த விலை திட்டமாக இருந்தாலும், BSNL நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் வாய்ஸ் கால் நன்மை, டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை என்று அணைத்து விதமான டெலிகாம் நன்மைகளையும் வழங்கி அசத்தியுள்ளது. BSNL நிறுவனம் குறைந்த விலை பிரிவின் கீழ் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 319 திட்டம் (BSNL Rs 319 Plan).

இந்த திட்டம் வெறும் 319 ரூபாய் விலையில் 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 65 days validity plan) உடன் வருகிறது. ஆம், இந்த திட்டம் உங்களுக்கு வெறும் 300 ரூபாய் விலை புள்ளியியல் 2 முழு மாதம் + கூடுதலாக 5 நாள் வரையிலான எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் செல்லமாக பிஎஸ்என்எல் 65 பிளான் (BSNL 65 Plan) என்று அழைக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 319 திட்டம் (BSNL Rs 319 Plan):

இந்த திட்டம் 65 நாட்களுக்கு முழுமையாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் லோக்கல் (local), STD, மற்றும் நேஷனல் ரோமிங் (national roaming) வாய்ஸ் காலிங் சேவையையும் வழங்குகிறது. இந்த திட்டம் 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இது தினசரி கிடைக்கும் நன்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்ற பட்ஜெட் திட்டங்களுடன் (BSNL budget plan) கிடைப்பது போல இந்த திட்டத்தில் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை (no daily SMS benefit) என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த திட்டம் வழக்கமாக கிடைக்கும் தினசரி டேட்டா நன்மையை (no daily data benefit) வழங்காது. அதற்கு மாற்றாக, இந்த திட்டம் 10GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

இந்த 10GB டேட்டாவை நீங்கள் 65 நாட்களுக்குள் எந்த தினசரி வரம்பும் இல்லாமல் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதை விட குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 299 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். பட்ஜெட் பிரியர்கள் மற்றும் குறைந்த விலையில் சிறந்த திட்டத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்காக இந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 65 Days Validity Plan For Rs 319 Price Check Benefits Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X