BSNL-க்கு கும்பிடு.. வெறும் ரூ.319 போதும்.. 65 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 10GB டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் திட்டங்கள் இருக்கின்றன. இப்போது, 2025ஆம் ஆண்டு வந்துவிட்டதால், புது சிம் கார்டு வாங்கி இருக்கும் கஸ்டமர்கள் அல்லது ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அதிக லாபத்துடன் கிடைக்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம். இந்த திட்டங்கள் 60 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கின்றன. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி மற்றும் லம்ப்-சம் டேட்டா சலுகைகளை கொடுக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 319 Prepaid Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 60 நாட்களுக்கும் மேல் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 65 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் டேட்டா/எஸ்எம்எஸ் சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

ஆகவே, நாள்தோறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால் (Roaming Calls) சலுகை கிடைக்கிறது. ஆனால், டேட்டாவில் அப்படி இல்லை, லம்ப்-சம் சலுகையாக 10 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படுகிறது. இதை 65 நாட்கள் வேலிடிட்டி வரையில் தேவைக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த 10 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகை பெற்று கொள்ளலாம். ஆகவே, கட்டணங்கள் இருக்கும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் முறையில் 300ஆக கொடுக்கப்படுகிறது. இதையும் தினசரி லிமிட் இல்லாமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். தினசரி டேட்டாவுக்கு அடுத்து வரும் பிஎஸ்என்எல் திட்டம் பக்கா தேர்வாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 345 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 345 Recharge Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டம் தினசரி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்கி இருக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 60 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 60 ஜிபி டேட்டாவை பெற முடிகிறது.
தினசரி டேட்டா கிடைப்பதால், ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த சலுகை மூலம் 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் கஸ்டமர்களுக்கு டேட்டா சேவை கொடுக்கப்படும். வாய்ஸ் கால்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கிடைக்கிறது.
எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு பயன்படுத்தும்படி இருக்கிறது. முந்தைய திட்டத்தில் 65 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் 60 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ்கள் வீதம் செய்து கொள்ள கிடைக்கிறது. ஆகவே, இந்த பிஎஸ்என்எல் திட்டம் 5 நாட்கள் வேலிடிட்டி குறைவாக இருந்தாலும், அதிக சலுகைகளை கொடுக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 91 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 91 Prepaid Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டம் டாக்டைம் வேல்யூ கொடுக்கும் திட்டமாகும். ஆகவே, வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆகவே, ஒரு நிமிட வாய்ஸ் கால்களுக்கு 15 பைசா கட்டணம் இருக்கும். அதேபோல ஒரு எம்பி டேட்டாவுக்கு 1 பைசா கட்டணமாக இருக்கும்.
மேலும், 25 பைசா செலவில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளலாம். இந்த மூன்று திட்டங்களும் 60 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இதில் ஏதாவது ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்யுங்கள். ரூ.91 மதிப்பிலான திட்டத்தில் சலுகைகள் இல்லையென்றாலும், 60 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








