திடீரென எஸ்எம்எஸ் வசதிக்கு 6பைசா கேஷ்பேக் வழங்கிய பிஎஸ்என்எல்.! ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்.!

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி பல்வேறு சலுகைகளை அறிவித்துகொண்டே இருக்கிறது பிஎஸ்என்எல்.

6பைசா கேஷ்பேக்

6பைசா கேஷ்பேக்

அதன்படி கடந்த மாதம் பிஎஸ்என்எல் நிறவனம் ஒவ்வொரு ஜந்து நிமிட குரல் அழைப்புகளுக்கு 6பைசா என்கிற கேஷ்பேக்வழங்கப்படும் என்று அறிவித்தது. தற்போது அதே மாதிரியான கேஷ்பேக் சலுகை எஸ்எம்எஸ்-வசதிக்கு வழங்கப்படுகிறது.

 ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் கேஷ்பேக் பெறமுடியும்

ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் கேஷ்பேக் பெறமுடியும்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் உங்கள் பிஎஸ்என்எல் எண்ணிலிருந்து நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும்கேஷ்பேக் பெறமுடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

140க்கும் மேற்பட்ட நாஸ்கா கோடுகள் கண்டுபிடிப்பு! எதற்கு பயன்படுத்தப்பட்டன?140க்கும் மேற்பட்ட நாஸ்கா கோடுகள் கண்டுபிடிப்பு! எதற்கு பயன்படுத்தப்பட்டன?

டிசமபர் 31-வரை மட்டுமே

டிசமபர் 31-வரை மட்டுமே

மேலும் பிஎஸ்என்எல் வழங்கும் இந்த கேஷ்பேக் சலுகையை ஆக்டிவேட் செய்ய உங்கள் எஸ்எம்எம் கம்போஸ் பாக்ஸிற்குசென்று அதில் "ACT 6 paisa" என்று டைப் செய்து 9478053334 என்கிற எண்ணிற்கு அனுப்பவும், பின்பு இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் மக்கள் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த சலுகையானது லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் ஃபைபர் சேவைகளுக்கும் கிடைக்கும். பின்பு இந்த ஆண்டு டிசமபர் 31-வரை மட்டுமே அணுக இந்த சலுகை அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் கால்

வாய்ஸ் கால்

அதேபோல் இதற்குமுன்பு அறிவிக்கப்பட்ட வாய்ஸ் கால்களுக்கான கேஷ்பேக் வாய்ப்பின் கீழ், சந்தாதாரர்களால்நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் 6பைசா என்கிற விகிதத்தில் கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பானது பிஎஸ்என்எல் வயர்லைன், பிராட்பேண்ட் மற்றும் எஃப்டிடிஎவ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எம்.டி.என்.எல்

எம்.டி.என்.எல்

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறவனம் ஆனது எம்.டி.என்.எல் பயனர்களுக்கு இலவச அழைப்புகளை அறிவித்துள்ளது, அதன்படி எம்.டி.என்.எல் எண்களுக்கான இலவச அழைப்பு நன்மைகளை வழங்கும் மூன்று திட்டங்களையும் கொண்டுள்ளது பிஎஸ்என்எல். அந்த திட்டம் என்னவென்றால், ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666 ஆகும்.

ரூ.429-திட்டம்

ரூ.429-திட்டம்: எம்டிஎன்எல் உட்பட அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்பு, ஒருநாளைக்கு 1ஜிபி டேட்டா வசதி, 81நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது.

ரூ.485-திட்டம்: அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்பு,ஒருநாளைக்கு 1.5ஜிபி டேட்டா வசதி,90நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது.

ரூ.666-திட்டம்: அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்பு, ஒருநாளைக்கு 1.5ஜிபி டேட்டா வசதி,122நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL 6 Paise Cashback Offer Announced, How to Activate details explained : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X