பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த ஆஃபர் மே 31 வரை கிடைக்கும்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது,அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 6பைசா என்ற விகிதத்தில்

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் தனது 6பைசா கேஷ்பேக் திட்டத்தை வருகிற மே 31-ம் தேதி வரை நீட்டிப்பதாகஅறிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும்; ஒரு கேஷ்பேக் திட்டத்தை வழங்கியது, இது லேண்ட்லைன்மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் குரல் அழைப்புகளின் வழியாக ஒவ்வொரு 5நமிடங்களுக்கு6பைசா என்ற விகிதத்தில் கேஷ்பேக்கை வழங்கியது.

டிவிட்டர் தளத்தின்படி இந்த

அதாவது பான்-இந்தியா அடிப்படையிலான இந்த அற்புதமான திட்டம் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது, ஆனால் பிஎஸ்என்எல் தமிழ்நாடு டிவிட்டர் தளத்தின்படி இந்த திட்டம் வரும் மே 31-வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி கேமரா கொண்ட சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது.108எம்பி கேமரா கொண்ட சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது.

 மாதத்திற்கு ரூ.129 முதல் ரூ.349 வரை

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லேண்ட்லைன் திட்டங்கள் மாதத்திற்கு ரூ.129 முதல் ரூ.349 வரை இருக்கும். பின்புகுறிப்பிட்ட வட்டங்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட திட்டங்களே உள்ளன.

ஜியோ நிறுவனத்திற்கு நேரடியாக

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்கள் செலவு செய்யும் ஐந்து நமிட குரல்அழைப்புகளுக்கும் ஆறு பைசாக்களை வழங்குவதாக அறிவித்தது, இது முகேஷ் அம்பானியின் தலைமையிலான
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நேரடியாக போட்டி கொடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் அதன்

அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் இலவச அழைப்பு நன்மையை நிறுத்திக் கொள்கிறது. இனிமேல்மற்ற நெட்வொர்க்குகளுக்கு இடையேயான வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு நமிடத்திற்கு ஆறு பைசா வசூலிக்க உள்ளது அறிவித்த பின்னரே பிஎஸ்என்எல் இந்த 6 பைசா கேஷ்பேக் சலுகையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் ஆனது உங்களுக்கு

மேலும் பிஎஸ்என்எல் அதன் வயர்லைன், பிராட்பேண்ட் மற்றும் எஃப்டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு இந்த 6பைசா
கேஷ்பேக் வாய்ப்பை அறிவித்துள்ளது. எனவே நீங்கள் பேசும் ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கு ஆறு பைசாஎன்கிற கட்டணம் ஆனது உங்களுக்கு கேஷ்பேக் ஆக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிஎஸ்என்எல் நிறுவனம்

அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் வழங்கும்படி தனது ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்தி உள்ளது. பின்பு எம்என்டிஎல் என்று அறியப்படும் மாகநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நெட்வொர்க்குக்கு எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

வெளியிட்டுள்ள

பிஎஸ்என்எல் சென்னை பிரிவு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, நிறுவனம் மொத்தம் 25ப்ரீபெய்ட் திட்டங்கள், ப்ரீபெய்ட் வவுச்சர்கள் மற்றும் பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன்களில் அன்லிமிடெட் குரல் அழைப்பு சலுகைகளை வழங்குகிறது.


அறிவிக்கப்பட்ட இந்த திருத்தத்தின் கீழ், மும்பை மற்றும் டெல்லியின் எம்.டி.என்.எல் நெட்வொர்க் ரோமிங் உட்பட இலவச ஹோம் மற்றும் தேசிய ரோமிங் அழைப்பு உள்ளிட்டவை கிடைக்கும். பின்பு எஸ்.டி.வி 99, எஸ்.டி.வி 104, எஸ்.டி.வி 349 மற்றும் எஸ்.டி.வி 447 ஆகியவை
தினசரி 250நிமிடங்கள் எஃப்யூபி அழைப்பு வரம்பை வழங்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.97, ரூ.118, ரூ.187, ரூ.199, ரூ.247, ரூ.298, ரூ.349, ரூ.399, ரூ.447 மற்றும் ரூ.499, மற்றும் ரூ.1,0

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.97, ரூ.118, ரூ.187, ரூ.199, ரூ.247, ரூ.298, ரூ.349, ரூ.399, ரூ.447 மற்றும் ரூ.499, மற்றும் ரூ.1,098 போன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு எம்டிஎன்எல் ரோமிங்கில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் இலவச எஸ்எம்எஸ் நன்மையையும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள அதே சலுகை ரூ.106, ரூ.107, ரூ.153, ரூ.186, ரூ.365, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.997, ரூ.1,699 மற்றும் ரூ.1,999 போன்ற PVக்கள் மற்றும் FRVக்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்

ஆனாலும் பிஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.96-ப்ரீபெய்ட் திட்டத்தில் செல்லுபடியை குறைத்துள்ளது.ரூ.96 மதிப்புள்ள ப்ரீபெய்ட் வவுச்சர் வசந்தம் கோல்ட் பிளான் என அழைக்கப்படும் இந்த திட்டம் இப்போது 60நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். முன்னதாக இதே திட்டம் 90நாட்கள் செல்லுபடியை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL 6 Paisa Cashback Offer for Landline Calls Extended Till May 31 and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X