ஆடிப்போன அம்பானி.. ஒரே ஊரில் 1,876 இடங்களில் BSNL 5G டவர்கள்.. கொடுத்து வச்ச ஏரியா.. இதுதான் உண்மையான 5ஜி!
பிஎஸ்என்எல் (BSNL) இன்னும் 4ஜி நெட்வொர்க்கையே முழுசா அறிமுகம் செய்யல.. இது எந்த காலத்துல 5ஜி சேவையை கொண்டு வர்றது.. என்று கூறி பிஎஸ்என்எல் நிறுவனத்தை பார்த்து கேலி செய்தவர்களின் வாயை கப்சிப் என்று அடைக்கும் படியான ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல், டெல்லி வட்டத்தில் உள்ள 1,876 தளங்களில் உள்நாட்டு 5ஜி வணிகச் சேவைகளை (Indigenous 5G commercial services) வழங்க ஒரிஜினல் எக்யுப்மென்ட் மெனுஃபேக்சரர்களை (Original equipment manufacturers - OEMs) அழைக்கும் டெண்டரை வெளியிட்டு உள்ளது.

பிஎஸ்என்எல் அதன் 5ஜி (BSNL 5G) சேவைகளின் கவரேஜிற்காக 900 மெகா ஹெர்ட்ஸ் லோ-பேண்ட்டையும் மற்றும் திறனுக்காக 3.5 ஜிகாஹெர்ட்ஸ் மிட்-பேண்ட்யும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது 5ஜி நெட்வொர்க் மூலம் மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட்டை (Enhanced mobile broadband - eMBB) வழங்க திட்டமிட்டுள்ளது.
கூடவே மேம்படுத்தப்பட்ட வாய்ஸ், வீடியோ, டேட்டா, எஸ்எம்எஸ், அல்ட்ரா-ரிலையபிள் லோ-லேடன்சி கம்யூனிகேஷன்ஸ் (Ultra-reliable low-latency communications - uRLLC), மெசிவ் மெஷின் டைப் கம்யூனிகேஷன்ஸ் (Massive Machine Type Communication - mMTC) சேவைகள் மற்றும் நெட்வொர்க் ஸ்லைசிங் (Network slicing) ஆகியவற்றை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏலதாரர்கள் ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் 5ஜி நெட்வொர்க்கின் உபகரணங்களை திட்டமிடுதல் (Planning), வடிவமைத்தல் (Designing), உபகரணங்களை வழங்குதல் / வரிசைப்படுத்துதல் (Supply / Deploy equipment) மற்றும் செயல்பாட்டை நிர்வகித்தல் (Manage operation) ஆகிய வேலைகளை செய்ய வேண்டும் என்று பிஎஸ்என்எல் தனது டெண்டரில் கூறியுள்ளது.
மேலும் ஏலதாரர்கள் வரிசைப்படுத்தலுக்கான காலக்கெடு, குறைந்தபட்ச வெளியீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் நெட்வொர்க்கை இயக்கும் போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) செயல்திறன் வரையறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பிஎஸ்என்எல் தனது டெண்டரில் குறிப்பிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் டவர்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால்.. அதாவது கூடுதல் 5ஜி ஆண்டெனாக்கள் மற்றும் உபகரணங்களை சேர்த்தால் அது தொடர்பான செலவுகளையும் ஏலதாரரின் பொறுப்பாகும் என்றும் பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது. வருவாய் பங்கை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 5ஜி மொபைல் மற்றும் பிக்ஸடு பிராட்பேண்ட் சேவைகள் ஆகிய இரண்டின் வருவாயையும் பகிர்ந்து கொள்ளும்.
எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, பிஎஸ்என்எல்-ன் இந்த டெண்டரின்படி, டெல்லி வட்டத்தில் ப்ரைமரி 5ஜி-ஏ-சர்வீஸ் ப்ரொவைடர் (Primary 5G-as-a-Service Provider (5GaaS - 5GaaSP) மற்றும் செகண்டரி 5ஜிஏஏஎஸ்பி இருக்கும். தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி, 5ஜி கோர் நெட்வொர்க் (5G core network) ஆனது முதலில் 1 லட்சம் பதிவுசெய்த சந்தாதாரர்களை ஆதரிக்க வேண்டும்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது சிம் கார்டு இல்லாமலே மெசேஜ் அனுப்ப உதவும் மற்றும் ஆடியோ / வீடியோ கால் செய்ய உதவும் டி2டி (D2D) என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. டி2டி என்பது டைரக்ட் டு டிவைஸ் (Direct to Device) என்பதன் சுருக்கமாகும்.
இதன்கீழ் பாரம்பரியமான மொபைல் நெட்வொர்க்குகளின் தேவைஇல்லாமல் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட டிவைஸ்களை கனெக்ட் செய்யலாம். இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் வியாசாட் (Viasat) உடன் இணைந்து, டி2டி சேவை தொடர்பான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து உள்ளது.
இது ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஃபிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள சாட்டிலைட் கனெக்டிவிட்டிஎ அம்சத்தை போலவேதான் வேலை செய்யும். அதாவது பிஎஸ்என்எல்-ன் டி2டி தொழில்நுட்பம் ஆனது நிலம், காற்று மற்றும் கடலில் வேலை செய்யும். ஆகையால் அவசரகாலத்தில் அல்லது இயற்கை பேரழிவுகளின் போதான 'கம்யூனிகேஷன்களுக்கு; இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








