ரூ.3000 விலையில் BSNL 5G போன்னா? எப்போது அறிமுகம்? இந்தியாவை கலக்கும் புது லீக்.. நீங்களும் வெயிட்டிங்கா?
இந்தியாவில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தினமும் அதிக வாடிக்கையாளர்களை சேர்ப்பதனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது இந்தியாவின் ஒரு கவன ஈர்ப்பாக பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் டாடா குழுமத்துடன் (Tata Groups) இணைந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போனின் (BSNL 5G Smartphone) அம்சங்கள் என்ன? இதன் விலை என்ன? மற்றும் இதன் வெளியீட்டு எப்போது நிகழும் என்பது போன்ற விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பேசும் பொருளாக மாறியுள்ள புதிய பிஎஸ்என்எல் 5ஜி மொபைல் (BSNL 5G Mobile) 6.8'' இன்ச் அளவு கொண்ட சூப்பர் அமோலேட் (AMOLED) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும், இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) விகிதம் மற்றும் 1080 × 2400 பிக்சல் தீர்மானத்துடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு பிங்கர்பிரிண்ட் சென்சாரைக் கொண்டிருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போனின் (BSNL 5G Smartphone):

பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் (BSNL 5G Smartphone Specifications):
இந்த பிஎஸ்என்எல் 5ஜி போன் (BSNL 5G Phone) மீடியாடெக் டைமென்சிட்டி 9100 (MediaTek Dimensity 9100 Chipset) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று வதந்திகள் வெளிவந்துள்ளன. சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் 5ஜி மொபைல் (5G Mobile) போன்களை விட இது மிகவும் மலிவானதாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் 5ஜி போனின் சிறந்த அம்சமாக அதன் பேட்டரி அம்சம் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. வதந்திகளின் படி, இந்த புதிய பிஎஸ்என்எல் போன் (BSNL Phone) 7000mAh சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனுடன் 120 வாட் சார்ஜர் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது வெறும் 20 நிமிடங்களில் சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய கூட பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது முழு நாள் பயன்பாட்டை உறுதி செய்யும் ஒரு புதிய சாதனமாக வெளிவரும். பிஎஸ்என்எல் 5ஜி போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இது 120MP மெயின் கேமரா, 16MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5MP டெப்த் சென்சாரைக் கொண்டிருக்கும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இது 32MP செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (BSNL 5G Smartphone Price):
பிஎஸ்என்எல் 5ஜி போன் மூன்று மாறுபாடுகளில் கிடைக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒரு மாடலும், மற்றொன்று 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன், மற்றும் இறுதியாக 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதில் டூயல் சிம் கார்டு மற்றும் மெமரி கார்டு பயன்படுத்தும் அம்சமும் இடம்பெறுமாம்.
இந்த புதிய BSNL 5G Phone-ன் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 4,999 முதல் ரூ. 9,999 விலைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அறிமுக தள்ளுபடியுடன் இது ரூ. 3,999 முதல் ரூ. 6,999 வரை விலையைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போனின் அறிமுகம் வரும் 2025, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நடைபெறலாம் என்று லீக் தகவலில் கூறப்படுகிறது.
இவை அனைத்தும் லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டுமே என்பதை கவனத்தில்கொள்ளவும். பிஎஸ்என்எல் தரப்பில் இருந்து இப்படி ஒரு ஸ்மார்ட்போனை BSNL இன்னும் உருவாக்கவில்லை. மக்கள் வதந்திகளை கண்டு காத்திருக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. இந்த தகவல் எல்லோரிடமும் சென்று சேரும்படி மக்கள் விழிப்புணர்வுடன் இதை பகிர்ந்துகொள்ளவும் என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








