Home
News

90 நிமிடங்களில் BSNL 5G SIM.. அதுவும் வீட்டு வாசலில் டெலிவரி.. அசத்தும் BSNL புது சேவை.. எவ்வளவு கட்டணம்?

ஆர்டர் செய்த அடுத்த 90 நிமிடங்களுக்குள் 5ஜி (5G) மற்றும் 4ஜி (4G) சிம் கார்டுகளை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய சேவையை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் (home delivery SIM card) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. வெயில் காலம் துவங்கிவிட்டது, வீட்டை விட்டு வெளியில் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால் மக்கள் பலரும் ஆன்லைன் சேவைகளையே அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். வீட்டுக்கு தேவையான பொருட்கள் முதல் உணவு, துணிகள், சோபா, பீரோ என்று எல்லாமே இப்போது ஆன்லைனில் வாங்க கிடைக்கிறது. இந்த வரிசையில் இப்போது SIM கார்டும் சேர்ந்துள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது மிகவிரைவாக 4ஜி (BSNL 4G) மற்றும் 5ஜி (BSNL 5G) சிம் கார்டுகளை வீட்டின் வாசலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் புதிய சேவையை துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் புதிய சிம் கார்டுகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். ஆம், ஆன்லைனில் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து, புது சிம் கார்டு ஆர்டர் செய்துகொள்ளலாம்.

90 நிமிடங்களில் BSNL 5G SIM.. அதுவும் வீட்டு வாசலில் டெலிவரி..

90 நிமிடங்களில் BSNL 5G SIM.. அதுவும் வீட்டு வாசலில் டெலிவரி:

மிக விரைவாக என்று கூறியதற்கு காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வெறும் 90 நிமிடங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டுகளை உங்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கிறது. வீட்டை விட்டு வெளியே வர விருப்பமில்லாதவர்கள் இப்போது ஆன்லைன் மூலம் புதிய பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டுகளை (BSNL 5G Ready SIM Card) வாங்கி பயன்பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பகுதில் அருகில் உள்ள BSNL அலுவலகம் சென்று, நேரிலும் புதிய BSNL 5G சிம் கார்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

BSNL நிறுவனம் இப்போது மலிவு விலையில் பல சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அதன் முதல் பிஎஸ்என்எல் 5ஜி ட்ரயல் சோதனையை (BSNL 5G Trial) வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, மக்களுக்கு பிஎஸ்என்எல் மீது மிகுந்த நம்பிக்கை உருவாகியுள்ளது.

பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டு (BSNL 5G Ready SIM Card):

இதனால், பிஎஸ்என்எல் அலுவலகம் சென்றுமக்கள் இப்போதே பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டுகளை (BSNL 5G Ready SIM Card) வாங்க துவங்கியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டுகள் இப்போது கிடைக்கின்றன. நேரில் சென்று வாங்க முடியாத ஆர்வமுள்ள டெலிகாம் பயனர்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து நேரடியாக வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படுகிறது.

இதை எப்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குவதென்று தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப் போகிறோம். BSNL இந்தியா முழுவதும் அதன் 4G சேவைகளை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு ஆபரேட்டர், இப்போது அதன் 5G நெட்வொர்க்கில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அக்டோபர் இறுதிக்குள் 80,000 டவர்களையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள 21,000 டவர்களையும் நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்ட் ஆன்லைனில் எப்படா ஆர்டர் செய்வது? (How to order BSNL 5G SIM card online):

அதாவது மார்ச் 2025 ஆண்டிற்குள் ஒரு லட்சம் 4G டவர்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவப்படும் 4G டவர்களில் இருந்தே பிஎஸ்என்எல் அதன் 5G சேவை பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 5G சேவைகளுக்கான டவர்களில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎஸ்என்எல் அலுவலகங்களில் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.

இதனால் சிம் கார்டு விநியோகம் செய்வதில் சில தடுப்பாடுகளும் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் பிஎஸ்என்எல் 5ஜி மற்றும் 4ஜி சிம் கார்ட் ஆர்டர் செய்வது எப்படி? (How to order BSNL 5G and 4G SIM card online): வாடிக்கையாளர்களுக்கு சேவையை எளிமைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் ஆன்லைன் மூலம் சிம் கார்டுகளை நேரடியாக வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய விநியோக சேவையை துவக்கம் செய்துள்ளது.

ஆன்லைனில் BSNL 5G SIM வாங்குவது எப்படி? இதோ செயல்முறை:

- முதலில் https://prune.co.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
- காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து Buy SIM card என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.
- BSNL செலக்ட் செய்து FRC திட்டத்தை தேர்வு செய்யவும்.
- BSNL Rs 108 Plan முதல் BSNL Rs 2999 Plan வரை பல திட்டங்கள் தேர்வு செய்ய கிடைக்கிறது.

- உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
- பிறகு, உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் தகவலை உள்ளிடவும்.
- பிறகு, OTP தகவலை உள்ளிடவும்.
- உங்கள் வீட்டு முகவரியை உள்ளிட்டு திரையில் காண்பிக்கப்படும் விபரங்களை பின்தொடரவும்.
- அடுத்த 90 நிமிடங்களில் உங்கள் வீடு தேடி வந்து, சிம் கார்டு ஒப்படைக்கப்படும்.

இந்த செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள prune.co.in தளத்தை பயன்படுத்தி, BSNL மட்டுமின்றி ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற நெட்வொர்க்கின் சிம் கார்டுகளையும் நீங்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். உங்கள் ஏரியா பின்கோடு தகவல்களை உள்ளிட்டு உங்கள் பகுதியில் டோர் டெலிவரி செய்யப்படுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 5G SIM Card Door Delivery In 90 Minutes At Your Door Step Select Plan and Order Online Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X