BSNL-ன் அடுத்த அதிரடி: இந்த நகரங்கள் தான் முதலில் 5G சேவையைப் பெறும்.. தம்பி ஜியோ ஓரம்போ..
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டங்களை உயர்த்தியதால் தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக பிஎஸ்என்எல்(bsnl) நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி அசத்தி வருகிறது இந்த பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனாலும் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் இன்னும் பெரும்பாலான இடங்களில் 3ஜி சேவையைத் தான் வழங்கி வருகிறது.
அதாவது தற்போது நாடு முழுவதும் 4G சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேசமயம் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல். கூடிய விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

5ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டுத் தொலைத்தொடர்பு ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் 5G சோதனை தொடங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த 5ஜி சோதனை இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சோதனை டெல்லி (Delhi), பெங்களூரு (Bangalore), ஹைதராபாத் (Hyderabad), சென்னை (Chennai) போன்ற பெரிய நகரங்களில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கும் என்பதால் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.

குறிப்பாக பிஎஸ்என்எல் தனது 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்த வேகமாக முயற்சித்து வருகிறது. எனவே இதன்மூலம் பிஎஸ்என்எல் பயனர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் அழைப்பு சேவையும், மலிவான விலையில் அதிவேக நெட்வொர்க்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி சேவை நாட்டில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் சமீபத்தில் ஜியோ நிறுவனம் புதிய போன், புதிய திட்டங்கள் மற்றும் சில சலுகைகள் கொடுத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அருமையான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருவதால், மக்கள் அதிகமாக இந்நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.

அதன்படி ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh)மாநிலத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் சுமார் 1 லட்சத்துக்கும் மேல் சிம் கார்டுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த தகவல் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியானது. மேலும் தமிழ்நாட்டில் கூட சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி போன்ற பல பகுதிகளில் இருக்கும் மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு தான் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 19 கிராமங்களுக்கு 4ஜி சேவையை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம். கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் பல அசத்தலான சலுகைகள் மற்றும் புதிய சேவைகளை வழங்கும்.


Click it and Unblock the Notifications








