Home
News

போட்றா வெடிய.. BSNL 5G சேவையின் பெயர் அறிவிப்பு.. 1 மாதத்திற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா?

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது தனது சமூக ஊடக பக்கம் வழியாக தனது 5ஜி சேவையின் பெயரை (BSNL 5G Service Name) அறிவித்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் இதை க்யூ-5ஜி (Q-5G) என அழைக்கிறது. இது குவாண்டம் 5ஜி (Quantum 5G) என்பதன் சுருக்கமாகும்.

இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் 5ஜி சோதனையை தொடங்குவதற்கு முன்பு, அதன் 5ஜி சேவைகளுக்கு பெயரிட பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு, கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு இந்த பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போட்றா வெடிய.. BSNL 5G சேவையின் பெயர் அறிவிப்பு!

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் க்யூ-5ஜி ஸ்டேபிள் வயர்லெஸ் அணுகல் (FWA) சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது "அதிக வேகமான" நெட்வொர்க் ஸ்பீட் மற்றும் சிம் இல்லாத செயல்பாட்டை உறுதியளிக்கிறது.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், இந்தப் பெயர் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது பிஎஸ்என்எல் இன் 5ஜி நெட்வொர்க்கின் சக்தி, வேகம் மற்றும் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்றும் பிஎஸ்என்எல் கூறியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ சேவையானது வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்ட ஒரு இன்டர்நெட் லீஸ் லைன் ஆக இருக்கும். இது சிம் அல்லது வயர்கள் தேவையில்லாத முதல் 5ஜி எப்டபுள்யூஏ என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது.

இந்த சேவை "உள்நாட்டில் உருவாக்கப்பட்ட" தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி, குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ ஆனது "வாய்ஸ் இல்லாமல் அதிவேக டேட்டாவை மட்டுமே" செயல்படுத்தும் மற்றும் இந்தியாவில் பிஎஸ்என்எல் குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ-வின் விலைகள் மாதத்திற்கு ரூ.999 முதல் தொடங்கும்.

கடந்த மாதம் வெற்றிகரமாக நிறுவப்பட்ட ஒரு லட்சத்துடன் கூடுதலாக ஒரு லட்சம் கூடுதல் 4ஜி டவர்களை நிறுவுவதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகளும் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் சொன்னாப்டியே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சேவைகளும் ஜூன் 2025 இல் தரம் உயர்த்தப்பட உள்ளது போல் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜூன் 2025 இறுதிக்குள் 1 லட்சம் சைட் சைட்கள் என்கிற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை பிஎஸ்என்எல் 75,000க்கும் மேற்பட்ட சைட்கள் என்கிற இலக்கை அடைந்துள்ளதாகவும், மேலும் 80,000க்கும் மேற்பட்ட சைட்கள் 'டிப்லாய்' (Deploy) செய்யப்பட உள்ளதாகவும் கூறி இருந்தது

மேலும் இந்திய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா "மே - ஜூன் 2025 க்குள் அனைத்து 100,000 சைட்களையும் செயல்படுத்தும் இலக்கை வைத்துள்ளோம். இதை தொடர்ந்து, ஜூன் மாதம் தொடங்கி 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு மாறுவோம்" என்றும் கூறி இருந்தார்.

அதாவது 1 லட்சம் சைட்களை ஆக்டிவ் செய்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தும். 4ஜி விரிவாக்கத்திற்கு உதவுவதற்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு ஆர்டரை நீட்டிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டிசிஎஸ் உதவியுடன் தற்போதுள்ள 4ஜி தளங்களை 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகளை செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டு இருந்தது. தற்போதுள்ள 4ஜி சைட்களை ஒரு எளிய மென்பொருள் உந்துதலுடன் 5ஜி என்எஸ்ஏ-க்கு மேம்படுத்த முடியும் என்பதை டாடா குழுமம் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் உள்நாட்டு 4ஜி-ஐ பயன்படுத்தும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் மட்டுமே ஆகும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் பயனர்களுக்கு 4ஜி-ஐ வழங்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடின. பாதுகாப்பு நிலைப்பாட்டிற்காகவும், சுயசார்பு கண்ணோட்டத்தாலும், 4ஜி வெளியீட்டிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயபடுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL 5G Service Name Announced Q 5G Also Known As Quantum 5G Price Rs 999 Per Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X