Home
News

BSNL 5G சிம் கார்டுகள் இப்போது எங்கே வாங்க கிடைக்கிறது? யாரெல்லாம் BSNL 5G சிம் வாங்கலாம்? இதனால் என்ன நன்மை?

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ஆணிவேரை ஆட்டி பார்க்கும் விதமாக தற்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் புதிய 5ஜி சிம் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இதை பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டு (BSNL 5G Ready SIM Card) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சிம் கார்டுகளின் அறிமுகத்தின் மூலம் பிஎஸ்என்எல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்காக தயார்நிலைக்கு மிக அருகில் வந்துவிட்டது என்பதை உறுதியளிக்கிறது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited), தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் 5G ரெடி சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் நெட்வொர்க் மேம்படுத்தலுக்கான ஒரு முக்கியமான படியாகும். இந்த புதிய சிம் கார்டுகள் இப்போது முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் பயன்பாட்டிற்கு இப்போது வாங்க கிடைக்கின்றன. மக்கள் இப்போதே பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

BSNL 5G சிம் கார்டுகள் இப்போது எங்கே வாங்க கிடைக்கிறது? இதன் நன்மை?

வெளிவந்தது புதிய பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டு (BSNL 5G Ready SIM Card):

இந்த முன்முயற்சியானது இணைப்பை மேம்படுத்துவதையும், இந்த பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு விரைவில் 5ஜி இணைய வேகத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் ஸ்டோர்ஸ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து, இந்த புதிய பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டுகளை வாங்கிக்கொள்ளலாம் .

இது பயனர்களுக்கு 4G இலிருந்து 5G-க்கு மென்மையான மாற்றத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், BSNL தற்போது வரை இன்னும் 5G நெட்வொர்க்கை முழுமையாக வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தான் பிஎஸ்என்எல் நிறுவனம் படிப்படியாக நாடு முழுவதும் 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்க்கில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைக்குள் வந்துவிடும் என்று பிஎஸ்என்எல் உறுதியளித்துள்ளது.

BSNL இன் புதிய 5G ரெடி சிம் கார்டு, BSNL லோகோ மற்றும் இந்தியாவின் மூவர்ணத்தில் "5G ready" என்ற தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மூன்று அளவுகளில் கிடைக்கிறது. வழக்கமான சிம் கார்டு அளவு, மைக்ரோ மற்றும் நானோ சிம் அளவில் இது கிடைக்கிறது. இது முழு அளவிலான சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் ஃபீச்சர் ஃபோன்கள் மற்றும் நானோ சிம்கள் தேவைப்படும் நவீன ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டிற்கும் இணக்கமாக உள்ளது.

யாருக்கெல்லாம் இந்த புதிய பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டு வாங்க கிடைக்கும்? (BSNL 5G SIM Card):

தற்போது, ​​BSNL ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் நெட்வொர்க் பயனர்களை புதிய 5G ரெடி சிம்மிற்கு மேம்படுத்த அனுமதிக்கிறதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும், டெலிகாம் ஆபரேட்டர் புதிய இணைப்பைப் பெறும் அல்லது வேறொரு நெட்வொர்க்கிலிருந்து போர்ட் செய்யும் பயனர்களுக்காக குறிப்பிடப்பட்ட சந்தைகளில் புதிய 5G திறன் கொண்ட சிம் கார்டுகளை வழங்குகிறது என்பது மட்டும் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சிம் கார்டுகளின் அறிமுகம் 5G தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய பல நன்மைகளுடன் வருகிறது. வேகம் அல்லது இணைப்பை சமரசம் செய்யாமல் ஒரே நேரத்தில் பல சாதனங்களை ஆதரிக்கும் திறன் ஒரு முக்கிய நன்மை. நெட்வொர்க் நெரிசல் பொதுவாக உள்ள மக்கள் அடர்த்தியான பகுதிகளுக்கு இது சிறந்ததாக அமைகிறது. தற்போதைய 4G நெட்வொர்க்குடன் ஒப்பிடும்போது, ​​வரவிருக்கும் 5G நெட்வொர்க் கணிசமான வேகத்தில் இருக்கும் மற்றும் குறைந்த தாமதத்தை வழங்கும்.

Best Mobiles in India

English summary
BSNL 5G Ready SIM Cards Started Rolling Out In Selected BSNL Circles For New and Existing Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X