BSNL 5G சேவை விரைவில், 4G அதிவிரைவில்.. ஜியோவே ஆச்சரியப்படும் ரீசார்ஜ் விலை!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த 5ஜி சேவை அறிமுகமாகி இருக்கிறது. 3ஜி, 4ஜி போன்று 5ஜி அறிமுகமாகி இருக்கிறது. இதில் என்ன பெரிய விஷயம், இன்னும் அதிக வேகத்தில் இணையம் பயன்படுத்தப்போகிறோம் அவ்வளவு தானே என்றால் அதுதான் இல்லை.

5ஜி அறிமுகத்தில் நாம் காண இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அளப்பறியதாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பல கட்டம் முன்னேற்றம்..

பல கட்டம் முன்னேற்றம்..

எடுத்துக்காட்டாக சொன்னால் 3ஜி பயன்படுத்தும் காலத்தில் யூடியூப் அணுகல் என்பதே மிகவும் அரிது.

4ஜி அறிமுகமான பிறகு யூடியூப் பயன்பாடு அன்றாட பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. சந்தாக்கட்டணம் செலுத்தி ஓடிடி தளங்களில் சப்ஸ்கிரைபர்களாக மாறி இருக்கிறோம், இன்னும் பல.

இந்த நிலையில் 5ஜி முழுமையாக நாட்டில் கிடைக்கத் தொடங்கும் காலம் முதல் நாம் பல கட்ட முன்னேற்றத்தை அடைய இருக்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை.

பிஎஸ்என்எல் நிலை என்ன?

பிஎஸ்என்எல் நிலை என்ன?

இந்தியாவில் 5ஜி சேவையை ஏர்டெல் அக்டோபர் 1 முதலே தொடங்கி இருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் இருக்கும் ஜியோ தீபாவளித் தினத்தன்று தனது 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என விஐ அறிவித்துள்ளது.

இதெல்லாம் சரி, அந்த பிஎஸ்என்எல் நிலை என்னப்பா என்றால் அதை தான் பார்க்கப்போகிறோம்.

4ஜி உடன் 5ஜி குறித்த அறிவிப்பும்..

4ஜி உடன் 5ஜி குறித்த அறிவிப்பும்..

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நாடு முழுவதும் விரைவில் 4ஜி என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜிக்கு தயாராகி வரும் நேரத்தில் பிஎஸ்என்எல் இப்போது தான் 4ஜி அறிவிப்பையே வெளியிட்டிருக்கிறதா என்று சிந்திக்க வேணாம். பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி அறிவிப்புடன் 5ஜி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.

4ஜி, 5ஜி அறிமுகம் எப்போது?

4ஜி, 5ஜி அறிமுகம் எப்போது?

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சிஎம்டி) பி.கே.பூர்வார் இதுகுறித்து கூறுகையில், இந்த ஆண்டு நவம்பர் முதல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 4ஜி கிடைக்கும் என உறுதியளித்தார். அதாவது அடுத்த மாதம் முதல் 4ஜி சேவை கிடைக்க இருக்கிறது.

அதேசமயத்தில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் கிடைக்கத் தொடங்கும் என்ற மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பை பூர்வார் உறுதி செய்தார்.

பிஎஸ்என்எல் அமைத்த கூட்டமைப்பு

பிஎஸ்என்எல் அமைத்த கூட்டமைப்பு

5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகியுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் 4ஜி சேவையை வெளியிட தயாராகி இருக்கிறது பிஎஸ்என்எல்.

PTI இன் அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் 4ஜி கோர் தொழில்நுட்பத்தை வழங்க பிஎஸ்என்எல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் அரசாங்கத்தின் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) தலைமையில் கூட்டமைப்பு அமைத்திருக்கிறது.

ஜியோவை விட குறைந்த விலையா?

ஜியோவை விட குறைந்த விலையா?

5ஜி திட்டங்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்பதை அரசு பலமுறை குறிப்பிட்டிருக்கிறது. இதை இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ரிலையன்ஸ் ஜியோவும் 5ஜி திட்ட விலை உலகிலேயே மிகக் குறைவாக இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதே உக்தியை தான் ஜியோ 4ஜி சேவையில் கையாண்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ம் மலிவு விலையில் 5ஜி என்று அறிவித்திருக்கிறது.

இந்த விலை ஜியோவை விட மலிவாக இருக்குமா என்பது சரியாகத் தெரியவில்லை இருப்பினும் ஜியோவின் விலைக்கு ஈடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக விரைவில் 4ஜி சேவை?

மிக விரைவில் 4ஜி சேவை?

அடுத்த 18 மாதங்களில் நாட்டில் கிட்டத்தட்ட 1.25 லட்சம் 4ஜி மொபைல் தளங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. எது எப்படியோ மிக விரைவில் 4ஜி சேவையும், விரைவில் 5ஜி சேவையும் கிடைக்கும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சகாப்தத்தில் 4ஜிக்கு செல்லும் பிஎஸ்என்எல்?

5ஜி சகாப்தத்தில் 4ஜிக்கு செல்லும் பிஎஸ்என்எல்?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) விரைவில் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. முன்னதாக, உபகரணங்கள் கொள்முதல் சிக்கல்கள் காரணமாக BSNL அதன் 4G வெளியீட்டை 2023 வரை தாமதப்படுத்தும் என்று அறிக்கைகள் வெளியாகின. ஆனால் இப்போது, ​​BSNL CMD (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்) பி.கே பூர்வார், நவம்பர் 2022 முதலே பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Bsnl 5G Launching Soon, 4G Very Soon in India: Do You Know Recharge Plan Price?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X