BSNL-க்கு கும்பிடு.. 4G இல்லங்க.. 5G-ஏ வருது.. கையும் ஓடல, காலும் ஓடல.. ஃபர்ஸ்ட் இங்கதான் கிடைக்கப் போகுது!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் கட்டண உயர்வானது, மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனத்துக்கு சாதகமாகிவிட்டது. ஏற்கனவே, பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனையும், ரீசார்ஜ் திட்டங்களும் பின்னிப்பெடல் எடுக்கின்றன. இப்போது, பிஎஸ்என்எல் 5ஜி வெளியீடு (BSNL 5G Launch) தயாராகிவிட்டது.
2023ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.89,047 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெற்றது போல பழைய டவர்களை 4ஜி டவர்களாகவும், அந்த 4ஜி டவர்களை 5ஜி டவர்களாக மாற்றக்கூடிய வகையிலும் பணிகளை செய்துவந்தது.

இதனிடையே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவைகள் பல்வேறு சர்க்கிள்களில் தொடங்கப்பட்டும், அடிமட்ட விலைக்கே ரீசார்ஜ் திட்டங்கள் கிடைத்தன. இதனால், லட்சக்கணக்காக கஸ்டமர்கள் செகண்டரி சிம் கார்டாக பிஎஸ்என்எல்லுக்கு மாறினர்.
இருப்பினும், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் எதிர்பார்த்த வேகத்தில் கஸ்டமர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், படிப்படியாக பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டு வருவதால், அதன் கஸ்டமர்கள் இன்றளவும் நம்பிக்கை இழக்காமல் இருக்கின்றனர். இப்போது, அவர்களுக்கு மேலுமொரு நம்பிக்கை அளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான அறிவிப்பு வந்திருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராபர்ட் ரவி இதை உறுதி செய்துள்ளார். அதில், பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் டெல்லியில் வெளியிடப்பட இருக்கிறது. டெஸ்டிங் நடந்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் குறிப்பிட்ட சிட்டிகளில் மட்டும் பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறோம். 4ஜி சைட்களை நிறுவும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது, ஏற்கனவே திட்டமிட்டப்படி 1 லட்சம் 4ஜி சைட்களை இந்தியா முழுவதும் நிறுவும் பணி நடந்து வருகிறது. இதில் 80,000 சைட்கள் ஏற்கனவே இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இவற்றில் கிட்டத்தட்ட 70,000 சைட்களில் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. வரும் ஜூன் மாதத்தில் 1 லட்சம் 4ஜி சைட்கள் தயாராகிவிடும். இதற்கு பிறகு 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என்றார்.
இதை பிரபல தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 4ஜி சேவைகளுக்கு பிறகு 5ஜி சேவைகளை நாடு முழுவதும் கொடுக்க தொடங்கிவிட்டன. தனியார் டெலிகாம் கஸ்டமர்கள் 4ஜி சேவைக்கு முற்றிலும் மாறிவிட்டர். 5ஜி சேவைக்கு அவர்களை மாற்றும் பணிகளில் இப்போது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளைகூட முழுவதும் வழங்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டாலும், வேகம் போதவில்லை என்று கஸ்டமர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தொலைத்தூர மலை கிராமங்கள், தனியார் டெலிகாம் சேவைகள் வழங்கப்படாத இடங்களில் பிஎஸ்என்எல் சேவைகள் கிடைப்பதால் அது இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது.
அதுவே சிட்டியில் இருக்கும் கஸ்டமர்களுக்கு வேகம் போதமானதாக இல்லை. டேட்டாவை மட்டும் தவிர்த்துவிட்டு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு எந்த நிறுவனம் பெஸ்ட் என்று பார்த்தால், நிச்சயம் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலாவதாக இருக்கலாம். ஆனால், டேட்டா சேவையானது, இப்போது டெலிகாம் கஸ்டமர்களிடம் இருந்து பிரிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








