தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் 5G சேவை எப்போது? சென்னை தலைமை பொது மேலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சமீபத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், 24 நாட்கள் வேலிடிட்டி மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கியது. அதேபோல் இந்நிறுவனம் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்திலும் கூடுதல் சலுகைகளை வழங்கியது.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
இந்நிலையில் சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்ற தகவல்களைக் கூறியுள்ளார். அதன்படி சென்னை பிஎஸ்என்எல். வட்டாரத்தில் செயல்படும் 1,902 செல்போன் கோபுரங்களில், இதுவரை 1,214 கோபுரங்கள் 4ஜி சேவைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கோபுரங்களையும் அடுத்த 6 மாதங்களுக்குள் 4ஜி சேவைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், தற்போது செல்போன் சேவையில் நிலவி வரும் இடையூறுகள் பெருமளவில் சரிசெய்யப்படும்.
மேலும், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பிஎஸ்என்எல். நிறுவனத்தின் 5ஜி (5G) சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் வைத்துள்ள ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் ஒடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications