தலைவன் எறங்கிட்டான்.. BSNL 5G சிம் உங்க வீட்டுக்கே தேடி வரும்.. நீங்க அலைய வேண்டாம்.. ஆன்லைன் ஆர்டர் போடுங்க..
'அடேங்கப்பா, இனி சின்ராசை கையில புடிக்க முடியாது போலயே' என்ற அளவிற்கு அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது டாப் ஸ்பீடில் இந்தியா முழுக்க பிரபலமடைந்து வருகிறது. இதற்கு ஒரு புறம் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கடுமையான விலை ஏற்றம் ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது மிகவிரைவாக 4ஜி (BSNL 4G) மற்றும் 5ஜி (BSNL 5G) சேவைகளை இந்தியா முழுக்க விரிவுபடுத்த துவங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அதன் முதல் பிஎஸ்என்எல் 5ஜி ட்ரயல் சோதனையை (BSNL 5G Trial) வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, மக்களுக்கு பிஎஸ்என்எல் மீது மிகுந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால், பிஎஸ்என்எல் அலுவலகம் சென்றுமக்கள் இப்போதே பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டுகளை (BSNL 5G Ready SIM Card) வாங்க துவங்கியுள்ளனர்.

பிஎஸ்என்எல் 5ஜி ரெடி சிம் கார்டு (BSNL 5G Ready SIM Card):
இந்தியாவின் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டுகள் இப்போது கிடைக்கின்றன. நேரில் சென்று வாங்க முடியாத ஆர்வமுள்ள டெலிகாம் பயனர்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து நேரடியாக வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படுகிறது. இதை எப்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குவதென்று தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப் போகிறோம். BSNL இந்தியா முழுவதும் அதன் 4G சேவைகளை படிப்படியாக வெளியிட்டு வருகிறது.
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு ஆபரேட்டர், இப்போது அதன் 5G நெட்வொர்க்கில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அக்டோபர் இறுதிக்குள் 80,000 டவர்களையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள 21,000 டவர்களையும் நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 2025 ஆண்டிற்குள் ஒரு லட்சம் 4G டவர்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது நிறுவப்படும் 4G டவர்களில் இருந்தே பிஎஸ்என்எல் அதன் 5G சேவை பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 5G சேவைகளுக்கான டவர்களில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎஸ்என்எல் அலுவலகங்களில் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது. இதனால் சிம் கார்டு விநியோகம் செய்வதில் சில தடுப்பாடுகளும் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பிஎஸ்என்எல் 5ஜி மற்றும் 4ஜி சிம் கார்ட் ஆர்டர் செய்வது எப்படி? (How to order BSNL 5G and 4G SIM card online):
வாடிக்கையாளர்களுக்கு சேவையை எளிமைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் ஆன்லைன் மூலம் சிம் கார்டுகளை நேரடியாக வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய விநியோக சேவையை துவக்கம் செய்துள்ளது. சரி , எப்படி ஆன்லைன் மூலம் பிஎஸ்என்எல் 5ஜி சிம் கார்டுகளை மக்கள் வாங்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
- முதலில் https://prune.co.in என்ற இணையதள பக்கத்திற்கு செலவும்.
- தமிழ்நாட்டு மக்களுக்கு வேறொரு இணையதள பக்கம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
- காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து Buy SIM card என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.
- BSNL செலக்ட் செய்து FRC திட்டத்தை தேர்வு செய்யவும்.
- உங்கள் விபரங்களை உள்ளிடவும் , பிறகு OTP தகவலை உள்ளிடவும்.
- உங்கள் வீட்டு முகவரியை உள்ளிட்டு திரையில் காண்பிக்கப்படும் விபரங்களை பின்தொடரவும்.
- அடுத்த 90 நிமிடங்களில் உங்கள் வீடு தேடி வந்து, சிம் கார்டு ஒப்படைக்கப்படும்.
தற்போது, முதற்கட்டமாக இந்த ஆன்லைன் சிம் கார்டு விநியோகம் செய்யும் சேவை, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் பகுதியில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . விரைவில் இது சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மற்றபகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்என்று கூறப்பட்டுள்ளது. இப்போதே, இந்த முறை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். விரைவில் இது உங்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








