பிஎஸ்என்எல்-ன் 100ஜிபி மற்றும் 300ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்.! இதோ.!
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த வரும் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்தது, குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக சலுகைகளை அள்ளிவழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்.

டேட்டா வரம்பு கொண்ட திட்டங்கள் - டேட்டா வரம்பு இல்லாத திட்டங்கள்
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அனைத்து பிஎஸ்என்எல் எஃப்.டி.டி.எச் மற்றும் சில நுழைவு நிலை திட்டங்களும் தினசரி எஃப்.யூ.பி வரம்பைக் கொண்டுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.777 மற்றும் ரூ.1,277 பாரத் ஃபைபர் திட்டங்களை தவிர, ரூ.2,499, ரூ.3,999 போன்ற பிற திட்டங்களும் தினசரி 170ஜிபி வரை டேட்டா வரம்பைக்கொண்டுள்ளன. இந்த தினசரி டேட்டா பிராட்பேண்ட் திட்டங்களின் மறுபக்கத்தில் சில பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள் உள்ளன. அவைகள் எந்தவிதமான தினசரி வரம்பையும் கொண்டிருக்கவில்லை.

இருந்தபோதிலும் கூட தினசரி டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது தினசரி டேட்டா வரம்புஇல்லாத பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது குறைந்த அளிவிலான நன்மைகளையே வழங்குகிறது.

டேட்டா வரம்பு இல்லாத அருமையான பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்
தினசரி டேட்டா வரம்பு இல்லாத பிராட்பேண்ட் திட்டங்கள் வேண்டும் என்றால் உங்களுக்கு 2 அட்டகாசமான விருப்பங்கள் உள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது வெறும் ரூ.99-முதல் தொடங்குகின்றன, ஆனால் வரம்பு இல்லாத அன்லிமிடெட் திட்டங்கள் ரூ.555 முதல் தொடங்குகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த ரூ.555 திட்டம் தான் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான தினசரி டேட்டா வரம்பு இல்லாத ஒரு திட்டமாகும்.

ரூ.555பிராட்பேண்ட் திட்டம்(100ஜிபி டேட்டா)
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.555பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு மாதத்திற்கு 100ஜிபிஅளவிலான டேட்டாவை 20எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது. மேலும் 100ஜிபி அளவிலான டேட்டாவிற்கு பிறகு, இணையவேகமானது 1எம்பிபிஎஸ் வரை வரை என்று குறைக்கப்படும். டேட்டாவை தவிர்த்து, இந்த திட்டத்தின் சந்தாதார்கள்பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு இரவு 10.30மணி
முதல் காலை 6மணி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் பெறுவார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

ரூ.749 பிராட்பேண்ட் திட்டம்(300ஜிபி டேட்டா)
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.749 பிராட்பேண்ட் திட்டம்; சூப்பர் ஸ்டார் 300 ஜிபி திட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதன்படி இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின்இணைய வேகமானது 50எம்பிபிஎஸ் ஆகும். குறிப்பிட்ட 300ஜிபி அளவிலான டேட்டா முடிந்த பிறகு சந்தாதாரர்கள்2எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் இணைய சேவையை பெறமுடியும் டேட்டா நன்மைகளை தவிர்த்து இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற இலவச அழைப்பு நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications