ஆல் இந்தியா கவனமும் BSNL மேல.. இவ்ளோ கம்மி விலைக்கு 100GB டேட்டாவுடன் 50 நாள் வேலிடிட்டி-ஆ!
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆனது, வருகிற 2026 ஆம் ஆண்டில் தனியார் டெலிகாம் நிறுவனங்களை ஒருகை பார்த்துவிடலாம் என்கிற முடிவில் இருப்பது போல் தெரிகிறது. அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டது.
சில தினங்களுக்கு முன்னர் தனது ரூ.1 ஃப்ரீடம் திட்டத்தை (BSNL Rs.1 Freedom Plan) மீண்டும் அறிமுகப்படுத்திய வேகத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் 100ஜிபி டேட்டா + 50 நாள் வேலிடிட்டி பிளானை கடுமையாக விளம்பரப்படுத்தி வருகிறது. அது ரூ.347 ரீசார்ஜ் (BSNL Rs.347 Plan) ஆகும்.

டெலிகாம் சந்தையில் உள்ள பெரும்பாலான திட்டங்கள் 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் என "முழுமை அடையாத எண்களிலான" வேலிடிட்டியுடன் வரும் நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனமானது ரூ.347 க்கு "ரவுண்ட் ஆக" 50 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை (50 Days Service Validity) வழங்குகிறது. அதுவும் ரூ.350 க்குள்; இது ஒப்பீட்டளவில் மலிவான விலையாகும்.
நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice), டெய்லி 2 ஜிபி டேட்டா (50 நாட்களுக்கு மொத்தம் 100ஜிபி டேட்டா), டெய்லி 100 இலவச எஸ்எம்எகள் (SMS) ஆகிவைகள் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது 50 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.
மீண்டும் அறிமுகமான ரூ.1 திட்டம்: வாடிக்கையாளர்கள் மத்தியில் உண்டான "செம்ம டிமாண்ட்" காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.1 ஃப்ரீடம் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இந்த சலுகை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும், 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
ரூ.1 க்கு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM Card) வாங்குவதன் மூலம் பயனர்கள் இந்த சலுகையை பெறலாம். ஆக இந்த சலுகை புதிய பிஎஸ்என்எல் பயனர்களுக்கு (New BSNL Customers) மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையின் கீழ் உள்ள பயனர்கள் (BSNL Existing Customers) இந்த ரூ.1 சலுகைக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.1 ஃப்ரீடம் திட்டம் ஆனது 30 நாட்கள் செல்லுபடியாகும் (30 Days Service Validity). மேலும் ரூ.1 ரீசார்ஜ் மூலம், பயனர்கள் தினசரி 2 ஜிபி அதிவேக (4ஜி) டேட்டா, இந்தியா முழுவதும் வரம்பற்ற லோக்கல் (Unlimited Local Calls) மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை (National Roaming Calls) ஆகியவற்றையும் பெறுகிறார்கள். கூடுதலாக, பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.
வெறும் ரூ.1 க்கு கிடைப்பதால், 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வரும் இந்த திட்டத்தை ஒரு இலவச திட்டம் என்றே கூறலாம். வெறும் ரூ.1 க்கு உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தை (Digital Freedom) பெறுவார்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுவதால் தான், இது ஃப்ரீடம் பிளான் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஃப்ரீடம் திட்டம் முதலில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை என்கிற காலக்கட்டத்திற்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஃப்ரீடம் திட்டத்தின் செல்லுபடியை 15 நாட்களுக்கு நீட்டித்தது, அதாவது செப்டம்பர் 15, 2025 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவித்து இருந்தது. இப்போது 2026 டிசம்பர் 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








