அப்படி போடு.. BSNL பயனர்களுக்கு குட் நியூஸ்.. 5G சேவை குறித்து வெளியான முக்கியத் தகவல்..
பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் தான் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) நெட்வொர்க் சேவையைத் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97500க்கு மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்கள் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதுவும் 3700 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் இந்த செல்போன் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலம் இயக்கப்படவுள்ளன. அதேபோல் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் மேம்படுத்தலுக்கு தயாராகி வருகிறது. அதாவது அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள், நிறுவனம் அனைத்து 4ஜி டவர்களையும் 5ஜி-க்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) இந்த 5ஜி சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதுவும் இந்த நடவடிக்கை இந்தியாவின் சொந்த உள்நாட்டு தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சாதனைக்கு பொதுத்துறை ஆராய்ச்சி மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நெட்வொர்க் ஆனது டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DOT), தேஜாஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks) மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. அதுவும் முற்றிலும் உள்நாட்டு 4ஜி அமைப்பால் இது இயக்கப்படுகிறது.
எனவே 5ஜி சேவை இன்னும் ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் ஆனது மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதன் வைஃபை காலிங் (BSNL Wi-Fi Calling) சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. வைஃபை காலிங் சேவையானது வோவைஃபை காலிங் (BSNL VoWi-Fi Calling) என்றும் அழைக்கப்படுகிறது.
வோவைஃபை என்றால் வாய்ஸ் ஓவர் வை-ஃபை காலிங் (Voice over Wi-Fi Calling) என்று அர்த்தம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்த சேவையை வழங்கி வருகின்றன, இப்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட இந்த போட்டியில் இணைந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் அறிமுகம் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 225 Prepaid Plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும். அதுவும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளை எதுவும் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








