Home
News

தேதி குறிச்ச BSNL.. எட்றா அந்த சிம் கார்ட்டை.. 4G மற்றும் 5G அறிமுகம் டைம்லைன் வெளியானது!

முன்னதாக ஒரு பிஎஸ்என்எல் (BSNL) பயனராக இருந்து, தற்போது அந்த பிஎஸ்என்எல் கார்ட்டை பயன்படுத்துவது இல்லையா? அதை எடுத்து ரெடியாக வைக்கவும். ஒருவேளை உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்ட்டே இல்லையா? பரவாயில்லை புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு ஒன்றை முடிந்த வேகத்தில் வாங்கவும்.

ஏனென்றால் அடுத்த 3-4 மாதங்கள் என்கிற காலக்கெடுவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2 தரமான வேலைகளை பார்க்க உள்ளது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது.. எப்போது அதன் 4ஜி சேவை (BSNL 4G) அறிமுகம் தொடர்பான பணிகள் முடிவுக்கு வரும் மற்றும் எப்போது அதன் 5ஜி சேவைக்கான (BSNL 5G) அறிமுகம் தொடங்கும் என்கிற டைம்லைனை (Timeline) அறிவித்துள்ளது.

BSNL 4G மற்றும் 5G அறிமுகம் டைம்லைன் வெளியானது!

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2025 இறுதிக்குள் 1 லட்சம் சைட் சைட்கள் என்கிற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை பிஎஸ்என்எல் 75,000க்கும் மேற்பட்ட சைட்கள் என்கிற இலக்கை அடைந்துள்ளது. மேலும் 80,000க்கும் மேற்பட்ட சைட்கள் 'டிப்லாய்' (Deploy) செய்யப்பட உள்ளன. ஜூன் 2025 இறுதிக்குள், ஒரு லட்சம் சைட்கள் ஆக்டிவ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Take a Poll

இந்திய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா "மே - ஜூன் 2025 க்குள் அனைத்து 100,000 சைட்களையும் செயல்படுத்தும் இலக்கை வைத்துள்ளோம். இதை தொடர்ந்து, ஜூன் மாதம் தொடங்கி 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு மாறுவோம்" என்று கூறி உள்ளார்.

அதாவது 1 லட்சம் சைட்களை ஆக்டிவ் செய்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தும். 4ஜி விரிவாக்கத்திற்கு உதவுவதற்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு ஆர்டரை நீட்டிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் 4ஜி தளங்கள் ஒரு நல்ல மைல்கல் என்றாலும், அவை இந்தியா முழுவதும் சேவை செய்ய போதுமானதாக இல்லை.

5ஜி சேவையை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் 5ஜி எஸ்ஏ-வை சோதிக்க திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், டிசிஎஸ் உதவியுடன் தற்போதுள்ள 4ஜி தளங்களை 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகளை செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 4ஜி சைட்களை ஒரு எளிய மென்பொருள் உந்துதலுடன் 5ஜி என்எஸ்ஏ-க்கு மேம்படுத்த முடியும் என்பதை டாடா குழுமம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு 4ஜி-ஐ பயன்படுத்தும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் மட்டுமே ஆகும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் பயனர்களுக்கு 4ஜி-ஐ வழங்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடின. பாதுகாப்பு நிலைப்பாட்டிற்காகவும், சுயசார்பு கண்ணோட்டத்தாலும், 4ஜி வெளியீட்டிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயபடுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரசு பள்ளிகளுக்கான ஒரு திட்டத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களை ஓரங்கட்டி விட்டு, தமிழ்நாடு அரசானது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. தனியார் தொலைத்தொடர்பு துறைகளை (Private telecom sectors) தேர்வு செய்யாமல், வருகிற 2025 ஏப்ரல் முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் (All Govt Schools) பிஎஸ்என்எல் இணையதள வசதியை (BSNL internet facility) தேர்வு செய்யுமாறு அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் (Directorate of School Education)அறிவுறுத்தியுள்ளது.

இணைய சேவைக்கான மாதாந்திர சேவை கட்டணத்தை (Monthly service charge for internet service) ஏப்ரல் முதல் மையப்படுத்தப்பட்ட பில் செலுத்துவதன் மூலம் நேரடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலுத்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் (Chief Education Officers) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமக்ர சிக்ஷா (Samagra Shiksha - SS) திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல்-க்கு பதிலாக இணையதள சேவையை பெறும் பள்ளிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களால் பட்டியலிடப்பட்டு, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் இண்டர்நெட் கனெக்ஷனை (BSNL Internet Connection) எடுத்து, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (Education Management Information System - EMIS) பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் விரைவில் அதுகுறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G to BSNL 5G Transition Likely To Starting in June 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X