Home
News

இனி வீட்ல சிம்.. BSNL 4G சிம் ஹோம் டெலிவரி.. விஸ்வரூபம் எடுக்கும் 4ஜி சிம் கார்டு சேவைகள்.. ஆப் மூலம் ஆர்டர்!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனமானது, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. புதிய கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், பழைய கஸ்டமர்களும் கூட்டம் கூட்டமாக பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளுக்கு (BSNL 4G SIM Cards) மாறி வருவதால், இப்போது தரமான சம்பவத்தை அந்த நிறுவனம் செய்து முடித்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்கான (BSNL 4G Service) பணிகள் அசூர வேகத்தில் நடந்து வருகின்றன. வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக 4ஜி சேவைகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஏனென்றால், நாடு முழுவதும் 25,000 4ஜி டவர்கள் தயாராகிவிட்டன. அடுத்த மாதத்துக்குள் 75,000 பிஎஸ்என்எல் 4ஜி டவர்களை நிறுவ இலக்கு வைத்துள்ளது.

இனி வீட்ல சிம்.. BSNL 4G சிம் ஹோம் டெலிவரி.. விஸ்வரூபம் எடுக்கும் 4ஜி!

தமிழ்நாட்டிலும் திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதனால், பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளை கஸ்டமர்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் மும்முரம் காட்ட தொடங்கி இருக்கிறது அந்த நிறுவனம். இப்போது, வீட்டுக்கு வீடு டெலிவரி செய்ய அனுமதி கொடுத்துள்ளது. ஆகவே, ஆப் மூலம் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் ஹோம் டெலிவரி (BSNL 4G SIM Cards Home Delivery): பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் ஏற்கனவே குருகிராம் மற்றும் காஜியாபாத் போன்ற பகுதிகளில் வீட்டுக்கு வீடு டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதனால், விரைவில் தமிழ்நாட்டில் ஆர்டர் செய்ய கிடைக்க இருக்கிறது.

சொல்லப்போனால், மொபைல் ஆப் மூலம் எளிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை ஆர்டர் (BSNL SIM Card Order) செய்து கொள்ள முடியும். அதாவது, கேரளாவில் பிரபலமான லைலோ ஆப் (Lilo App) ஆப் மூலம் பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த லைலோ ஆப்பை, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த ஆப் மூலம் புதிய பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளை ஆர்டர் செய்வது மட்டுமல்லாமல், பழைய பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டுகளையும் 4ஜி சிம் கார்டாக போர்ட் செய்து கொள்ள முடியும். இப்படி பிஎஸ்என்எல் சிம் போர்ட் (BSNL SIM Port) செய்யும் கஸ்டமர்களுக்கு 4 ஜிபி இலவச டேட்டாவும் (4GB Free Data) கொடுக்கப்படுகிறது.

மேலும், பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் (BSNL Self Care App) மூலம் கிடைக்கும் சிம் கார்டு போர்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போன்ற சேவைகளை இந்த லைலோ ஆப் மூலம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் சேவையை தமிழ்நாட்டிலும் கொண்டுவர வாய்ப்புள்ளது அல்லது பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் மூலமே புதிய சிம் கார்டுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி வரலாம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் - பிஎஸ்என்எல் நிறுவனமானது, கேரளா வட்டத்தில் 1000 4ஜி டவர்களை நிறுவி ஏற்கனவே கஸ்டமர்களிடையே நம்பிக்கையை பெற்று விட்டது. இதை தொலைத்தொடர்பு துறை உறுதி செய்யதிருக்கிறது. வரும் நாட்களில் இந்த டவர்கள் மூலம் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் விரைவில் தொடங்கப்படும்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்திய பிறகு பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகின. மூன்று மாதங்களில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் லட்சக்கணக்கான கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறி இருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
BSNL 4G SIM Cards Home Delivery To Customers Via LILO App in Kerala How To Buy BSNL SIM Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X