BSNL சிம் கார்டு வேண்டுமா? நீங்க அலைய வேண்டாம்.. நாங்களே வீட்டுக்கு வந்து BSNL 4G SIM தரோம்.. எப்படி பாஸ்?
பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) வாங்குவது இனி மிகவும் சுலபமானது மக்களே. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து, எந்தவித அலைச்சலும் இல்லாமல், உங்கள் வீட்டில் இருந்தபடியே வெறும் ஒரு சில நிமிடங்களில் உங்களால் புதிய பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும். உங்கள் கையில் ஒரு மொபைல் மட்டும் இருந்தால் போதும், பிஎஸ்என்எல் நிறுவனம் உங்களுக்கான புதிய சிம் கார்டை வீடு தேடி வந்து டெலிவரி செய்யுமென்று அறிவித்துள்ளது. புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை எப்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வதென்பதை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது மக்கள் விரும்பும் தொலைத்தொடர்பு நிறுவனமாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) மாறியுள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு, மலிவு விலையில் சிறந்த திட்டங்களை வாரி வழங்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை மக்கள் இப்போது நாடத் துவங்கியுள்ளனர்.

BSNL சிம் கார்டு வேண்டுமா? நீங்க அலைய வேண்டாம்.. வீட்டுக்கே SIM கார்டு தேடி வரும்:
இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பக்கம் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் புதிய பிஎஸ்என்எல் இணைப்பை பெற, புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்க முன்வந்துள்ளனர். திடீரென கூடிய டிமாண்டால், ஒரே நேரத்தில் பல லட்சம் மக்களுக்கு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனம்த்திற்கு ஒரு சில சிக்கல்கள் எழுந்தன. சில நகரங்களில் சிம் கார்டுகள் கிடைக்காமல் மக்கள் அலைமோத துவங்கினர்.
BSNL சிம் கார்டு தட்டுப்பாடை குறைக்க, நிறுவனம் இப்போது புதிய சிம் கார்டுகளை வழங்கி வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக, இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் பல நகரங்கள் மற்றும் பிஎஸ்என்எல் வட்டங்களில் ஆன்லைன் மூலம் சிம் கார்டு விநியோகம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த முறையை பின்பற்றி ஆன்லைனில் புது பிஎஸ்என்எல் சிம் கார்டு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே நேரடியாக BSNL புதிய சிம் கரடுகளை டெலிவரி செய்கிறது.
இந்த முறையை பின்பற்றி எப்படி ஆன்லைன் மூலம் புது BSNL சிம் கார்டு வாங்குவது என்பதை தெரிந்துகொள்ளலாம் (How to order new BSNL 4G SIM card online) வாங்க. BSNL இன் 4G (BSNL 4G network) நெட்வொர்க் ஏற்கனவே கேரளா மற்றும் புனே உட்பட நாட்டின் பல பகுதிகளில் அணுக கிடைக்கிறது. இங்கு பயனர்கள் 4ஜி உடன் அதிவேக இன்டர்நெட் சேவையை அனுபவிக்கின்றனர்.
ஆன்லைன் மூலம் BSNL 4G SIM கார்டு பெறுவது எப்படி? LILO ஆப்ஸ் எப்படி செயல்படும்?
எனவே, மலிவான திட்டம் மற்றும் சிறந்த இணைப்புக்காக BSNL-க்கு மாற மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். உங்களுக்கான புதிய சிம் கார்டை நீங்கள், லிலோ ஆப்ஸ் (LILO App) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, புதிய பிஎஸ்என்எல் 4G சிம் கார்டை ஆர்டர் (BSNL 4G SIM Card Order Online) செய்யலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிற்கும் இந்த ஆப்ஸ் பயன்படுத்த கிடைக்கிறது.
இது பயனர்களுக்கு BSNL 4G சிம் வாங்கவும், அவர்களின் தனியார் நெட்வொர்க் மொபைல் எண்ணை போர்ட் செய்யவும் மற்றும் சிம் கார்டை ஹோம் டெலிவரி செய்யவும் அனுமதிக்கிறது. இந்த ஆப்ஸ் உங்களால் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் போனில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் புதிய பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டை பெறுவதற்கு ஆர்டர் செய்யலாம்.
WhatsApp மூலம் BSNL 4G சிம் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?
புதிய BSNL4G SIM கார்ட் ஆர்டர் செய்ய உங்கள் போனில் 8891767525 என்ற எண்ணை சேவ் செய்துகொள்ளுங்கள். பிறகு WhatsApp திறந்து, இந்த எண்ணின் சாட் பாக்ஸ் சென்று, Hi என்று டைப் செய்து மெசேஜ் அனுப்புங்கள், பிறகு Order Fish என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும், உங்கள் முகவரியை உள்ளிட்ட சொல்லி கோரும், இங்கு Add விருப்பத்தை கிளிக் செய்யவும்.
உங்கள் லொகேஷனை மார்க் செய்ய சொல்லி வாட்ஸ்அப் பரிந்துரைக்கும். உங்கள் வீட்டில் லொகேஷனை மார்க் செய்து செண்ட் கொடுத்தால் அந்த முகவரிக்கு உங்கள் சிம் கார்டு அனுப்பப்படும். புதிய சிம் காடிற்கான கட்டணம் வசூலிக்கப்படும். BSNL 4G சிம் கார்டு வீடு தேடி டெலிவரி (BSNL 4G SIM card doorstep delivery) செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








