Home
News

பிஎஸ்என்எல் விடிவுகாலம்.. நவம்பரில் 4G சேவை.. எந்த மாநிலத்தில் தொடக்கம்? திட்டங்கள் எப்படி?

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக வரும் நவம்பரில் மாதத்தில் இருந்து முதல் கட்ட 4ஜி சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவை எந்த மாநிலத்தில் தொடங்கப்படும்? பிஎஸ்என்என் 4ஜி சேவைக்கான கட்டணங்கள் எப்படி? உள்ளிட்ட முழு விவரம் இதோ.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கஸ்டமர்கள் 4ஜி சேவைக்கு பின் 5ஜி சேவைக்கான மாற்றத்துக்கு தயாராகி வருகின்றனர். இதில், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கிவிட்டது. அடுத்த சில மாதங்களில் 5ஜி சேவைக்கான ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பிஎஸ்என்எல் விடிவுகாலம்! நவம்பரில் 4G சேவை! எந்த மாநிலத்தில் ஆரம்பம்?

ஆனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு, இன்றளவும் 4ஜி சேவை கூட கிடைக்கவில்லை. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மிகவும் மலிவான விலைக்கு கிடைத்தும், இன்டர்நெட் வேகம் போதாமல் தவிக்கின்றனர். இதனிடையே, 4ஜி சேவை இப்போது வரும், அப்போது வரும், என்று காத்திருந்து களைத்து போய்விட்டனர். இவர்களுக்கு உத்வேகம் அளிக்கும்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வரும் தீபாவளியில் இருந்து (நவம்பர் மாதம்) 4ஜி சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், எந்த மாநிலத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களைவிட பஞ்சாப் மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களில் 4ஜி டவர் மேம்பாட்டு பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன.

அதிலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் 4ஜி சேவைக்கான சோதனை பணிகள் முழுவதும் முடிந்துவிட்டன. ஆகவே, அந்த மாநிலத்தில் இருந்தே பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கு அடுத்து மற்ற மாநிலங்களில் படிப்படியாக 4ஜி சேவை வழங்கப்பட இருக்கிறது. அடுத்த 18 மாதங்களுக்குள் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் என்று டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது, பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள் (BSNL 4G Plans) குறித்து தெரிந்து கொள்வோம். இப்போதைக்கு 4ஜி சேவையில் மூன்று திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன.
ரூ 411 விலையிலும், ரூ 788 விலையிலும், ரூ 1515 விலையிலும் வருகின்றன. இவை முழுக்க முழுக்க டேட்டா சலுகைகளை மட்டுமே கொடுக்கின்றன. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்காது.

பிஎஸ்என்எல் ரூ 411 திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 180 ஜிபி டேட்டா ஒதுக்கப்படுகிறது. இந்த 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்தி பிறகு, ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ 788 திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 360 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், முந்தைய திட்டத்தை போல 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ 1515 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்கும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் எப்யூபி (FUP) டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த மூன்று திட்டங்களுக்கும் உங்களிடம் பேஸ் வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று திட்டங்களையும் மற்ற டெலிகாம் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் மிகுந்த சலுகைகள் கொண்டாதவே இருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்களின் இன்டர்நெட் வேகத்துக்கு ஏற்பட பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் நவம்பர் மாதத்தில் அந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G Services From November in Punjab Early 2025 All Over India Check Prepaid Plans And Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X