Home
News

BSNL-க்கு கும்பிடு.. ஒரு மாசத்துல 4ஜி.. மாதம் ரூ.184-க்கு 395 நாட்கள் வேலிடிட்டி.. அக்டோபருக்கு இப்ப ரீசார்ஜ்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharati Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு பிறகு படாதபாடுபட்டு வருகின்றன. இப்போது மலிவான விலைக்கு திட்டங்களை வைத்திருக்கும் மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு புதிய கஸ்டமர்கள் குவிய தொடங்கிவிட்டனர். இருப்பினும், பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி சேவை பெரும் குறையாகவே இருக்கிறது. இப்போது, அது முடிவுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்துக்கு இப்போதே ரீசார்ஜ் பின்னிப்பெடல் எடுக்கிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஸ்டமர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 4ஜி சேவையை அதிவிரைவில் வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் வேலை செய்துவருகிறது. ஏற்கனவே, நாட்டின் பெரும்பாலான பிஎஸ்என்எல் வட்டாரங்களில் 4ஜி சோதனை ஓட்டம் நடந்து முடிந்துவிட்டது. ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே 15,000-க்கும் மேற்பட்ட 4ஜி தளங்கள் நிறுவப்பட்டன.

BSNL-க்கு கும்பிடு.. ஒரு மாசத்துல 4ஜி.. மாதம் ரூ.184-க்கு 395 நாட்கள்!

அதன்பின், ​​நாடு முழுவதும் 25,000 4ஜி டவர்களை நிறுவியதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த டவர்கள் மூலம் முதல்கட்ட 4ஜி சேவைகளை வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. ஆகவே, வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த சேவை தொடங்கப்பட இருப்பதாக, பிஎஸ்என்எல் மூத்த நிர்வாகிகள் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் வந்துவிட்டால், ரீசார்ஜ் கட்டணம் உயர்ந்தாலோ அல்லது வேலிடிட்டி குறைக்கப்பட்டாலோ என்ன செய்வது என்ற குழப்பத்தில், இப்போதே அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்ய தொடங்கிவிட்டனர். இருப்பினும், பிஎஸ்என்எல் விலையை ஏற்ற வாய்ப்புகள் கிடையாது என்பதே உண்மையாகும்.

இருந்தாலும், 4ஜி சேவைக்கு முன்பே மலிவான விலைக்கு நல்ல சலுகைகளை கொடுக்கும் மாதாந்திரம் மட்டும் வருடாந்திர திட்டங்களை பற்றி இப்போது தெரிந்துகொள்வது நல்லது. இது டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் அதிக வேலிடிட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களாகும். முதலில் மாதாந்திர வேலிடிட்டி திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ.199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): பிஎஸ்என்எல்லில் ரூ.153 முதலே டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகையுடன் திட்டங்கள் வருகின்றன. ஆனால், 26 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், இந்த ரூ.199 திட்டத்தில் 30 நாட்களுக்கு வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இதில் டேட்டா சலுகையும் கூடுதலாகவே கிடைக்கின்றன.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 60 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களை போலவே போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. அதாவது 2 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு செய்து கொள்ள முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (National Roaming Voice Calls) சலுகையை இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் பெறலாம். இந்த முக்கிய சலுகைகள் போக, வாவ் எண்டர்டெயின்மெண்ட் (WOW Entertainment), ஜிங்க் மியூசிக் (Zing Music) போன்ற கூடுதல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இப்போது வருடாந்திர திட்டத்தை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்துக்கு 395 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

மொத்தமாக 790 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே வாவ் எண்டர்டெயின்மெண்ட், ஜிங்க் மியூசிக் போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் டியூன்ஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.184 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G Services Expected To Launch in October 2024 Check Cheapest Monthly And Yearly Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X