BSNL 5G சேவை எப்போது வரும்? வெளியானது முக்கியத் தகவல்கள்.. 4G நெருங்கிடுச்சு.. உற்சாகத்தில் பயனர்கள்..
கடந்த மாதம் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிர வைத்தது. அதாவது ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) போன்ற நிறுவனங்கள் 25 சதவீதம் வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தின. இதுதவிர ஜியோ நிறுவனம் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கியது. இதனால் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் தற்போது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
அதாவது கடந்த மாதம் முதல் லட்சக் கணக்கில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தும், டேட்டா சலுகைகளை அறிவித்தும் வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதாவது பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உ.பி. மேற்கு மற்றும் ஹரியானா போன்ற வட்டங்களில் 15,000 4ஜி டவர்களை (towers) நிறுவியுள்ளது. இதுதவிர வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் இந்தியா முழுவதும் சுமார் 80,000 டவர்களை அமைக்க உள்ளது. மேலும் 2025 மார்ச் மாதத்துக்குள் மீதமுள்ள 21000 டவர்கள் நிறுவப்பட உள்ளது.
எனவே 2025 மார்ச் மாதம் நாட்டின் அனைத்து இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கிவிடும். குறிப்பாக வரும் மார்ச் மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கப்பட்ட உடன் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் 5ஜி சேவையும் அறிமுகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
குறிப்பாக இப்போது 5ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல 5ஜி-ஐ பயன்படுத்தி வீடியோகால் சேவையை முதல் முறையாகப் பரிசோதித்துப் பார்த்தார். சமீபத்தில் டெல்லியில் உள்ள c-dot கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இந்த வீடியோ காலில் பெண் ஒருவருடன் 5ஜி சேவையின் செயல்திறன் குறித்துப் பேசினார். எனவே இதன் மூலம் பிஎஸ்என்எல் 5ஜி தொழில்நுட்பத்தின் செயல் திறன் உறுதியாகியுள்ளது என்று ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு தான் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 19 கிராமங்களுக்கு 4ஜி சேவையை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்.

கூடிய விரைவில் சென்னை (chennai) மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் தமிழ்நாட்டில் (tamil nadu) மட்டும் சுமார் 80,000-க்கு அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் இணைப்புகளைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இன்னும் பல புதிய சேவைகள் மற்றும் திட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
குறிப்பாகத் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பிராட்பேண்ட் திட்டங்களில் கூட சலுகைகளைக் கொடுத்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.399 பிராட்பேண்ட் திட்டத்தில் 3.3TB டேட்டா நன்மையை 40Mbpsவேகத்தில் வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








