Home
News

பிஎஸ்என்எல் 4ஜி சேவை: இன்னும் 24 மாதங்கள் ஆகுமா? மத்திய அமைச்சர் தகவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட குறைவான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் மலிவு விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல திட்டங்களை வைத்துள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

ஆனாலும் ஜியோ, ஏர்டெல் உட்பட பல தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கிறது. பின்பு இந்த தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னமும் 4ஜி சேவையை வழங்கவில்லை.

 விளிம்பில் இ

கடுமையான நிதி நெருக்கடியால் மூடலின் விளிம்பில் இருந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது பல மேம்பாடுகளுடன் அருமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 4ஜி உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை 4ஜி உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவையை வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது.

3ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி

பின்பு நீண்ட கால தாமத்துக்குப் பிறகு, 8 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவை வழங்க அனுமதித்தது. ஆனால் ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த முடிவை அமல்படுத்தவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றுவரை 3ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் மொபைல் சேவையை வழங்கி வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

 சஞ்சய் தோத்ரே

சஞ்சய் தோத்ரே

இந்நிலையில் எதிர்வரும் 18 முதல் 24 மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வழங்கும் பணிகள் நிறைவடையும் என நாடாளுமன்றத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர்சஞ்சய் தோத்ரே அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு துறை இணை

பின்பு மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே கூறியது என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக இதனை எழுத்துப்பூர்வமாக அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அரசு 4ஜி டெண்டருக்கான

அதேபோல் அரசு 4ஜி டெண்டருக்கான அழைப்பையும் விடுத்துள்ளதாக அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார். மேலும் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் 5ஜி உயர் தொழில்நுட்பம் மொபைல் சேவையை வழங்க காத்திருக்கின்றன. எனவே தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை கொண்டு வருவதற்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை கொண்டுவந்தால் பல்வேறுபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL 4G service to be completed within next 24 months - Dhotre: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X