Home
News

விரைவில் அறிமுகமாகும் BSNL 4ஜி சேவை: டெலிகாம் சந்தையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் அடுத்த மாதம் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. அதாவது இன்னும் சில வாரங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்க இன்னும் சில காலங்கள் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த 4ஜி சேவை வெளியானால் கூட நகர் புறங்களில் அதனால் பெரிய அளவு வளர்ச்சி பெறமுடியாது என்றே தெரிகிறது.

விரைவில் அறிமுகமாகும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை.!

ஏனெனில் தற்போது முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்து அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றன. குறிப்பாக பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கும் சமயம் நகரங்களில் பெரும்பாலானவர்கள் 5ஜி சேவைக்கு மாறியிருப்பார்கள்.

அதேபோல் நகர் புறங்களில் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் கிராமப் புறங்களில் பிஎஸ்என்எல் மீண்டும் பெரிய வளர்ச்சி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைவான விலைக்கு டெலிகாம் சேவை வழங்குவதன் மூலம் பலரை மீண்டும் பிஎஸ்என்எல் பயன்படுத்த வைக்கலாம். குறிப்பாக அரசின் நேரடி உதவியும் நிதியும் தொடர்ந்து கிடைப்பதால் மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லமுடியும்.

ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்க இன்னும் சில காலங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 4ஜி இணைப்புகளை 5ஜி இணைப்புகளாக மாற்றுவது சுலபம் என்பதால் இன்னும் 2 ஆண்டுகளில் 5ஜி சேவையும் கிடைக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை.!

அதேபோல் பல ஆண்டுகளுக்கு முன்பே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது இந்நிறுவனம் அதற்கு முனைப்புக் காட்டவில்லை. இப்போது அதற்கான பணிகளை டிசிஎஸ் (TCS-Tata Consultancy Services) நிறுவனத்துடன் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இணைந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் வழங்கும் சில அசத்தலான திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த ரூ.239 திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள்.

விரைவில் அறிமுகமாகும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை.!

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இலவச BSNL ட்யூன்ஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G service coming soon: What changes will it bring in the telecom market? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X