Home
News

செம்ம... BSNL நிறுவனத்தின் இனிப்பான செய்தி! இனி பயனர்களை கையில் பிடிக்க முடியாது..

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை விரைவில் தமிழகத்தில் வழங்க உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் சில நகரங்களில் விரைவில் 4ஜி சேவை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் சமீபத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் என்று திருநெல்வேலி பிஎஸ்என்எல் பொது மேலாளர் பிஜி பிரதாப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால், மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் முயற்சியின்கீழ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தில், 4ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

செம்ம...பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இனிப்பான செய்தி!

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 222 கைப்பேசி கோபுரங்களும் 10 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. எனவே இதனால் அனைத்து கைப்பேசி கோபுரங்களும் 4ஜி திறன் கொண்டதாக இருக்கும். பின்பு மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி-க்கு மாற்றுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மேலும் கூடுதலாக 24 புதிய 4ஜி கைப்பேசி கோபுரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கப் பணிகள் முடிந்ததும் பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும், சேவையின் தரமும் சிறப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிஎஸ்என்எல் பயனர்கள் 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு தங்களின் பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், கிளை அலுவலகங்கள், மேளா நடைபெறும் இடங்களில் இலவசமாக 4ஜி சிம் கார்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.200-க்கு கீழ் வைத்துள்ள சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

செம்ம...பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இனிப்பான செய்தி!

பிஎஸ்என்எல் ரூ.107 திட்டம்: பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.107 வவுச்சர் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும். அதேபோல் 200 நிமிட அழைப்பு நன்மைகள், BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் BSNL ட்யூன்களுக்கான அணுகலை வழங்கும் இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.153 திட்டம்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிரபலமான ரூ.153 வவுச்சர் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம்: பிஎஸ்எனஎல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

செம்ம...பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இனிப்பான செய்தி!

பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம்: பிஎஸ்எனஎல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

Best Mobiles in India

English summary
BSNL 4G service and Best Selling prepaid plans in Tamil Nadu : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X