BSNL 4G Mobile ரெடி.. Jio சாம்ராஜ்யமே ஆட்டம் காணப்போகுது.. JioPhone-ஐ விட மலிவு விலையில் BSNL போன்.. என்ன விலை
அவன்ன சொல்லி யாராச்சும் நிறுத்துங்கடா என்று ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை பார்த்து புலம்ப துவங்கியுள்ளன. காரணம், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் மிக விரைவில் அதற்கு சொந்தமான மொபைல் சாதனத்தை இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலிவு விலையில் 4ஜி திட்டங்களை வழங்குவதோடு, மக்களுக்கு மலிவு விலையில் 4ஜி போனையும் (BSNL 4G Mobile) வழங்க BSNL தற்போது முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான முழு தகவல் இதோ. இந்தியாவில் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி அசத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், இப்போது இந்திய மக்களுக்கு மலிவு விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி (BSNL 4G) இணைப்புடன் இணைய அனுமதிக்கும் புதிய மொபைல் சாதனத்தை (BSNL New Mobile) விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆம் மக்களே பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சாதனம் விற்பனைக்கு வரவுள்ளது.

BSNL 4G Mobile ரெடி.. Jio சாம்ராஜ்யமே ஆட்டம் காணப்போகுது:
ஏற்கனவே, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 15% அதிகரித்ததை தொடர்ந்து, மக்கள் இப்போது மலிவு விலை திட்டங்களை ரீசார்ஜ் செய்வதற்காக பிஎஸ்என்எல் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாற துவங்கியுள்ளனர். இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் 28 லட்சத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே தனியார் நிறுவனங்களுக்கு பெரிய கவலையாக இருக்கும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிஎஸ்என்எல் நிறுவன தொடக்க நாள் விழாவில் பிஎஸ்என்எல் மொபைல் பற்றிய தகவலை அறிவித்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவின் பல இடங்களில் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை அறிமுகம் செய்து வருகிறது. மலிவு விலையில் 4ஜி நெட்வொர்க் கிடைப்பதால் இந்தியாவில் BSNL இப்போது பிரபலமடைந்து வருகிறது.
இப்போது, இந்திய மக்களை இன்னும் அதிகமாக கவரும் விதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம், மொபைல் தயாரிப்பு நிறுவனமான கார்போன் மொபைல்ஸ் (Karbonn Mobiles) நிறுவனத்துடன் இணைந்து, பிஎஸ்என்எல் சிம் (BSNL SIM Card) உடன் இணங்கும் பிரத்தியேகமான BSNL 4G Mobile சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உறுதியான தகவலால் ஜியோ நிறுவனம் இப்போது கடுப்பில் உள்ளது.
JioPhone-ஐ விட மலிவு விலையில் BSNL போன்னா? என்ன விலை?
ஏனெனில், இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்கிற்குள் வர விரும்பும் மக்களை ஊக்குவிக்கும் வகையில், ஜியோ நிறுவனம் அதன் சொந்த ஜியோபோன் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில், ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் 4ஜி (Jio Bharat 4G) என்ற பியூச்சர் போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மலிவு விலையில் 4ஜி நெட்வொர்க்கிற்குள் மாறத்துடிக்கும் மக்களுக்கு உதவும் சாதனமாக பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், இனி நிலைமை அப்படியே தலைகீழாக மாறப்போகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் கார்போன் மொபைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மலிவு விலை பிஎஸ்என்எல் பியூச்சர் போன் (BSNL Feature Phone) சாதனத்தை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் மொபைல் (BSNL Mobile), ஜியோபோன் சாதனத்தை விட மலிவான விலையில் வெளிவரலாம் என்று வதந்திகள் வெளியாகியுள்ளது. இது ரூ.1,000 விலையை பெறலாம் என்று கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G):
இதற்கு நடுவே, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) நெட்வொர்க் சேவையை சோதனை செய்து வருகிறது. அக்டோபர் இறுதிக்குள் தமிழ்நாடு வட்டம் முழுமையான பிஎஸ்என்எல் 4ஜி வட்டமாக மாற்றப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் நம்பிக்கை கூறியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த 6 மாதங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








