Home
News

இப்ப வர சொல்லு: 4G களத்திற்கு தயாரான BSNL., டோட்டல் இந்தியாவில் அறிமுகம்

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்) நிறுவனம், விற்பனை முகவா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு கடன் பாக்கித் தொகை ரூ.1,700 கோடியை சமீபத்தில் அளித்தது. மேலும், பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு நவம்பா் மாத ஊதியத்தையும் வழங்கியது. சமீபத்தில் இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநா் பி.கே.புா்வாா் கூறியிருந்தார்.

ரூ.10,000 கோடி கடன்

ரூ.10,000 கோடி கடன்

அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.10,000 கோடி கடன் உள்ளது. இந்நிலையில், ஒப்பந்ததாரா்கள், விற்பனை முகவா்கள் ஆகியோருக்கு ரூ.1,700 கோடி கடன் பாக்கித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு நவம்பா் மாதம் ஊதியம் ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன

கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன

தொலைத் தொடா்புச் சேவையை வழங்கி வரும் அரசின் பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் நிறுவனமும், எம்டிஎன்எல் நிறுவனமும் (மகாநகா் டெலிபோன் நிகாம் லிமிடெட்) கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து, லாபகரமாக இயக்குவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த அக்டோபா் மாதம் ஒப்புதல் அளித்தது.

ரூ.69,000 கோடியில் வலுப்படுத்தும் திட்டம்

ரூ.69,000 கோடியில் வலுப்படுத்தும் திட்டம்

இவ்விரு நிறுவனங்களையும் ரூ.69,000 கோடியில் வலுப்படுத்தும் திட்டத்துக்கும், 4ஜி சேவையைத் தொடங்குவதற்கும், ஊழியா்கள் விருப்ப ஓய்வுபெறும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தாலும், முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையானது, மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் கிடைக்கும். முன்னதாக 20 வட்டங்களிலும் அதிகாரப்பூர்வமாக செல்லும். மார்ச் 1 ஆம் தேதி சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பிஎஸ்என்எல் அதன் புதிய 4 ஜி-ஒன்லி திட்டங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தும். இது தற்காலிக வெளியீட்டு தேதியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

மார்ச் 1 ஆம் தேதி முதல் அறிமுகம்

மார்ச் 1 ஆம் தேதி முதல் அறிமுகம்

பிஎஸ்என்எல் தற்போது கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பல பகுதிகளில் அதன் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. சில வட்டங்களில், பிஎஸ்என்எல் ஏற்கனவே இருக்கும் 3ஜி ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி 4 ஜி சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் முழு அளவிலான வெளியீடானது மார்ச் 1 ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL 4G likely to launch on march 1 and introduce new 4g only plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X