Home
News

75 வருடமாக நெட்வொர்க் இல்லை.. கண்ணூத்து கிராமத்திற்கு விரைந்த BSNL 4G.. Jio, Airtel, Vi-க்கு அசிங்கமா போச்சு..

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இந்த ஆண்டுடன் 78 வருடங்கள் (Independence day 2024) ஆகப்போகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராம மக்கள் இப்போது தான் தங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று கூறும் அளவிற்கு கடந்த 75 வருடங்களாக தொலைத்தொடர்பு சேவையே இல்லாமல் தினசரி தத்தளித்து வந்துள்ளனர். ஆம், 75 வருடங்களாக லேண்ட்லைன் டெலிபோன், மொபைல் போன், ஸ்மார்ட்போன், இன்டர்நெட் சேவை, என்று எதுவுமே கிடைக்காமல் 2000 குடும்பங்களை கொண்ட ஒரு கிராமம் தவித்து வந்துள்ளது. இவர்களின் நீண்ட வருட சிக்கலுக்கு தற்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.

திருச்சி (Trichy) மாவட்டம், மணப்பாறை பகுதிக்கு அருகில் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள கிராமம் தான் கண்ணூத்து (Kannuthu) என்ற இந்த கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 2000-திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்திற்கு கடந்த 75 ஆண்டுக்கும் மேலாக எந்தவித தொலைத்தொடர்பு சேவையும் (Telecommunication service) கிடைக்காமல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வசிக்கும் மக்களிடம் செல்போன் (Cellphone) இருந்தாலும், இவர்களுக்கு டவர் கிடைக்காமல் இருந்துள்ளது.

75 வருடமாக நெட்வொர்க் இல்லை.. கண்ணூத்து கிராமத்திற்கு விரைந்த BSNL 4G

75 வருடமாக நெட்வொர்க் இல்லை.. நான்கு மலைக்கு நடுவே புதைந்து கிடந்த கிராமத்திற்கு BSNL 4G:

இவர்கள் அவசரத்திற்கு யாரையாவது தொடர்புகொள்ள வேண்டும் என்றாலே 5 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து, அருகில் உள்ள மற்றொரு கிராம பகுதிக்கு சென்றால் தான் இவர்களால் தொலைத்தொடர்பு சேவையை அணுக முடியும் என்ற நிலையில் கடந்த 75 ஆண்டு காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். கண்ணூத்து கிராமத்திற்கு செல்போன் டவர்கள் (new Cell phone towers) அமைத்து தரக்கோரி, அந்த பகுதி மக்கள் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனங்களாக (Telecom companies) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் எல்லாம் கண்ணூத்து பகுதிக்கு வந்து, நான்கு மலைக்குள் புதைந்துகிடக்கும் கிராமத்தை பார்த்துவிட்டு, இங்கு எங்களால் நெட்வொர்க் கவரேஜ் தரமுடியாதென்று கூறி பேக் அடித்து ஓடிவிட்டனர். ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மட்டும் இந்த கிராமத்தையும், கிராம மக்களையும் கைவிடவில்லை. இந்த பகுதிக்கு எப்படியாவது நெட்வொர்க் சேவையை வழங்க வேண்டும் என்று அயராது முயற்சி செய்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் முதலில் எப்படி இந்த கிராமத்திற்கு நெட்வொர்க் கவரேஜை (Kannuthu village network coverage) கொடுப்பதென்று தெரியாமல் தத்தளித்து வந்துள்ளது. காரணம், நான்கு மலைக்கு நடுவே இந்த கிராமம் சூழப்பட்டுள்ளது. பிறகு, பல சவால்களை சந்தித்த பிறகு, இந்த கிராமத்திற்கு 2ஜி (2G) இல்லை 3ஜி (3G) இல்லை, நேரடியாக இந்த கிராமத்திற்கு பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை வழங்கி அசத்தியுள்ளது.

BSNL-ன் விடாமுயற்சிக்கு கிடைத்தது விஸ்வரூப வெற்றி.. குவியுது பாராட்டு.. Jio, Airtel, Vi-க்கு அசிங்கமா போச்சு:

ஒருவழியாக 75 வருட போராட்டத்திற்கு பிறகு, இந்த கண்ணூத்து கிராமத்திற்கு இப்போது நேரடியாக பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்த பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பிற்கு பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் பெரியளவு நம்பிக்கையை வழங்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தனியார் நிறுவனங்களால் கைவிடப்பட்ட ஒரு கிராமத்தை, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி காரணங்களால் சூழ்ந்து அப்பகுதி மக்களுக்கு நிம்மதியான தொலைத்தொடர்பு சேவையை வழங்கி அசதியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அபாரமான சாதனையை இப்போது அனைவரு பாராட்டி வருகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்கள் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தால் எப்படி இது சாத்தியமானது என்று ஆராய்ந்து வருகின்றனர். மறுபுறம், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சாதனையை பார்த்து, மக்களுக்கு பிஎஸ்என்எல் மீது புது நம்பிக்கை உருவாகியுள்ளது. இது தனியார் நிறுவனத்தின் வியாபாரத்தை பாதிக்கும் என்று இப்போது ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் கதிகலங்கி பீதியில் உறைந்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL 4G Launched In Kannuthu Village Near Trichy Tamil Nadu After 75 Years Of Telecommunication Struggle
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X